கோவை மாவட்டம் பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க சார்பில் சிட்டிங் எம்.பி சண்முகசுந்தரம் மீண்டும் போட்டியிட சீட் கேட்ட நிலையில் இவருக்கு சீட்டு வழங்கலாமா வேண்டாமா என்ற யோசனையில் திமுக தலைமைக் கழகம் இருந்து வந்தது இந்நிலையில் தி.மு.க முக்கிய பிரமுகர் இவருக்கு துணையாக இருந்து மீண்டும் வாய்ப்பு வாங்கித் தருவார் என்று பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.
இந்நிலையில், பொள்ளாச்சி தொகுதியில் மடத்துக்குளம் தி.மு.க மேற்கு ஒன்றிய செயலாளர் கே.ஈஸ்வரசாமி போட்டியிடுவதாக தி.மு.க தலைமைக் கழகம் அதிரடியாக அறிவித்தது. ஏற்கனவே எம்.பி யாக இருந்த கு.சண்முகசுந்தரத்திற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தி.மு.க வின் தேர்வு சரியா தவறா என்பதை உங்களிடமே விட்டு விடுகிறேன். வாக்களிப்பது நமது கடமை மட்டுமல்ல நமது உரிமையும்கூட என்ற சிந்தனையோடு,
தமிழக துணை தலைமை நிருபர்,
-M.சுரேஷ்குமார்.