Trending

முடீஸ் ஆரம்ப சுகாதார நிலையத்துக்குள் புகும் பாம்புகளால் பொதுமக்கள் அச்சம்!!!

கோவை மாவட்டம் வால்பாறை வட்டார பகுதியை அடுத்துள்ள முடிஸ் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. அதற்கு முன்பாக திரையரங்கம் மூடப்பட்ட நிலையில் உள்ளது. இந்த திரையரங்கத்தை சுற்றிவர செடிகொடிகள் வளர்ந்து புதர்கள் சூழ்ந்துள்ளது. இப்பகுதிகளில் உள்ள புதர்களினால் பாம்புகள் மற்றும் இரவு நேரங்கள் சிறுத்தை கரடி நடமாட்டம் அதிகமாக உள்ளது என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

பகல் நேரங்களில் உலா வரும் பாம்புகளால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். முடிஸ் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உள்ளேயும் அடிக்கடி பாம்புகள் புகுந்து விடுவதால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் உள்ளனர். இதனால் மருத்துவமனைக்கு செல்வதற்கே அச்சப்படும் அவல நிலை உருவாகியுள்ளது. அவ்வழியில் அதிக அளவு ஊர்ந்து செல்லும் பாம்பு கூட்டங்களை கண்டு பொதுமக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர்.

எனவே இதற்கு தகுந்த நடவடிக்கை எடுத்து மருத்துவமனை வரும் நோயாளிகளின் அச்சத்தை போக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்

நாளைய வரலாறு செய்திக்காக

வால்பாறையில் இருந்து
-திவ்யகுமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

கோவையில் நடைபெற்ற சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கான தென் மாநில அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் நான்கு மாநிலங்களை சேர்ந்த சி.பி.எஸ்.இ.பள்ளி மாணவ,மாணவிகள் மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்…

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp