மூணாறு பகுதியில் அமைந்துள்ள குண்டலை எஸ்டேட்டில் ஏ.எல்.பி.எஸ் பள்ளிக்கூடத்தில் 61 ஆம் ஆண்டுவிழா கொண்டாட்டங்கள் மிகச் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியை துவக்கி வைத்தது டாக்டர் பிரதீப் அரசு மேல்நிலைப்பள்ளி செண்டுவாரை ஆசிரியர் மற்றும் ஜீவா பீல்ட் ஆபீஸர், கணேசன் பீல்ட் ஆபீஸர், பி.டி.ஏ தலைவரான சசி ஆகியோர் விழாவை துவங்கி வைத்தனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மூணாறு உபமாவட்ட உதவி கல்வி அதிகாரி திரு சரவணன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். தலைமை ஆசிரியை பழனித்தாய் மற்றும் பிற ஆசிரியர்கள் ரோசலின்,கவிதா, ஜான்சன், சத்யா ஆண்டனி தாஸ் மற்றும் ப்ரீ பிரைமரி ஆசிரியைகளான விஜயலட்சுமி, சோபியா ஆகியவர்கள் தலைமையில் 61 ஆம் ஆண்டு விழா நடைபெற்றது. குண்டலை ஏ.எல்.பி.எஸ் பள்ளிக்கூடத்தின் கிளைப் பள்ளி புதுக்கடியில் இயங்கி வருகிறது. இப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு வரை உள்ளது நான்காம் வகுப்பு படிப்பதற்கு மாணவர்கள் குண்டலை ஏ எல் பி எஸ் பள்ளிக்கூடத்திற்கு வர வேண்டும். இதில் மொத்தம் 96 மாணவர்கள் படித்து வருகின்றனர்.ஆண்டு அறிக்கையை தலைமை ஆசிரியை பழனிதாய் அவர்கள் வாசித்தார்கள். மற்றும் தொடர்ந்து நடந்த கலை நிகழ்ச்சிகளில் மாணவர்கள் மிகச் சிறப்பாக பங்கெடுத்தனர் மாணவர்களின் நிகழ்ச்சிகளை கண்டு களிப்பதற்காக எஸ்டேட் மக்களும் மற்றும் பெற்றோர்களும் அங்கு வருகை தந்திருந்தார்கள். மாணவர்களின் பல நிகழ்ச்சிகளும் மிகச் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சிகள் நிறைவடைந்தது தொடர்ந்து பரிசுகளும் வழங்கப்பட்டது. குழந்தைகள் நிகழ்ச்சிகளில் ஆசிரியர்களும் குழந்தையாகவே மாறி பல நடனங்களும், பல நிகழ்ச்சிகளும் நடந்தது.
நாளை வரலாறு செய்திக்காக,
-மணிகண்டன் கா
மூணாறு,கேரளா