கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம்: ரேஷன் கார்டு உள்ளவர்கள் உடனடியாக தங்களது அட்டையை ஆதார் நகளை கொடுத்து கைரேகை பதிவு செய்து புதுப்பிக்க வேண்டுமென மத்திய அரசு உத்தரவிட்ட நிலையில் அதற்கான வேலை அனைத்து மாநிலங்களிலும் மிகவும் ஜரூராக நடைபெற்றுக் கொண்டு வருகிறது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கேரளாவில் மஞ்சள் (AAY) மற்றும் இளஞ்சிவப்பு (PHH) ரேஷன் கார்டுகளில் பெயர் உள்ள அனைத்து உறுப்பினர்களின் e-KYC புதுப்பிப்பை மார்ச் 31 2024க்குள் முடிக்க வேண்டும் என்று மத்திய அர உத்தரவிட்டுள்ளது எனவே அனைத்து கார்டு உறுப்பினர்களும் மாநிலத்தில் உள்ள எந்த ரேஷன் கடைக்கும் நேரில் சென்று இ-கேஒய்சி புதுப்பிப்பை குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
E kyc அப்டேஷனுக்கு வருபவர்கள் ஆதார் காரடு மற்றும் ரேஷன் கார்டு கொண்டு வர வேண்டும் இ கேஒய்சி புதுப்பிப்பு அனைத்து நாட்களிலும் மதியம் 1.30 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் ஞாயிறு உள்ளிட்ட ரேஷன் கடை விடுமுறை நாட்களில் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் கிடைக்கும்
E-KYC புதுப்பிப்பு 15, 16 மற்றும் 17 மார்ச் 2024 (வெள்ளி சனி மற்றும் ஞாயிறு) காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை செய்யப்படும். ஆனால் அந்த நாட்களில் ரேஷன் விநியோகம் இருக்காது
குறிப்பு ரேஷன் கடைகளுக்கு நேரடியாகச் செல்ல முடியாத உடல் ஊனமுற்ற உறுப்பினர்களுக்கும் .POS இயந்திரத்தைத் தொட முடியாத உறுப்பினர்களுக்கும் KYC புதுப்பிப்பு பின்னர் அறிவிக்கப்படும்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ஜான்சன் மூனாறு.