கோவை மாவட்டம் வால்பாறையில் இந்தியா கூட்டணியின் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொள்ளாச்சி தொகுதி வேட்பாளர் ஈஸ்வர சுந்தரமூர்த்தி அவர்களின் அறிமுக கூட்டம் வால்பாறை திமுக நகர செயலாளர் சுதாகர் என்கிற குட்டி தலைமையில் கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் முன்னிலையில் நடைபெற்றது.
அறிமுக கூட்டத்தில் பொள்ளாச்சி பாராளுமன்ற பொறுப்பாளர் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு இந்தியாவை காப்பாற்ற சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அனைவரும் உதயசூரியனுக்கு வாக்களியுங்கள் வால்பாறையும், தமிழகத்தையும், இந்தியாவையும், பாதுகாக்க வேண்டும் என்றால் அனைவரும் கருத்து வேறுபாடு பார்க்காமல் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்கும் படி கேட்டுக் கொண்டனர்.
இக்கூட்டத்தில் கூட்டணிக் கட்சிகள் இந்தியா காங்கிரஸ்,மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்தியா கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தை, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், கொங்கு நாடு மக்கள் கட்சி, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் பொறுப்பாளர்கள் கலந்துகொண்டு இந்தியா கூட்டணியின் பொள்ளாச்சி தொகுதி வேட்பாளர் ஈஸ்வரமூர்த்தி அவர்களுக்கு சால்வை அணிவித்து அவரை வரவேற்று தாங்கள் இப்பகுதியில் வெற்றி பெற்று விடுவீர்கள் சாமானிய மக்களின் வாழ்வாரத்தையும் இப்பகுதியில் இருக்கும் அனைத்து தரப்பு மக்களையும் பாதுகாத்துக் கொடுக்க உறுதுணையாக இருங்கள் என்று கேட்டுக் கொண்டதோடு அவருக்கு வாக்கு சேகரித்தனர்.
இக்கூட்டத்திற்கு மாவட்ட ஒன்றிய நிர்வாகிகளும் நகர மன்ற உறுப்பினர்களும் கழக முன்னோடிகளும் கழக உறுப்பினர்களும் கூட்டணி கட்சி தோழர்களும் பொதுமக்களும் திரளானோர் கலந்து கொண்டு வேட்பாளர் அறிமுக கூட்டத்தை சிறப்பித்தனர்.
தமிழக துணை தலைமை நிருபர்,
-M.சுரேஷ்குமார்,பொள்ளாச்சி.
One Response
DAR..DMK Divans apudur..annamalai .New..pollachi.