இயேசு கிறிஸ்து அனுபவித்த துன்பங்களையும், சிலுவையில் அறையப்பட்ட தினத்தை நினைவு கூறும் விதமாக உலகம் முழுவதும் கிறிஸ்துவர்களால் புனித வெள்ளி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி பல்வேறு பகுதிகளில் தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி மற்றும் ஜெபக்கூட்டங்கள் இன்று நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சிதம்பரநகரில் அமைந்துள்ள பேதுருவின் ஆலயத்தில் (CSI) பனைத் தொழில் செழிக்க, பதநீர் மற்றும் கருப்பட்டி நல்ல உற்பத்தி கிடைக்க வேண்டி புனித வெள்ளி தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் பனை மரத்திலிருந்து எடுத்து வரப்படும்,
பதநீரை ஆலயத்தில் வைத்து சிறப்பு பிரார்த்தனை செய்து பதநீரை ஜாதி, மத பேதமின்றி அனைத்து தரப்பு பொதுமக்களுக்கு இலவசமாக காலை 5 மணி முதல் தற்போது வரை வழங்கப்பட்டு வருகிறது… இதில் விளாத்திகுளம் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஏராளமான பொதுமக்கள் ஆலயத்திற்கு வந்து பதநீரை பருகி அதை வாட்டர் கேன் மற்றும் பாத்திரங்கள் மூலம் தங்களது வீட்டிற்கும் செல்கின்றனர். மேலும் இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் புனித வெள்ளியை முன்னிட்டு பதநீர் இலவசமாக வழங்குவது வழக்கமான ஒன்று எனவும், இன்று தற்போது வரை சுமார் 3 ஆயிரம் லிட்டர் பதநீர் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நாளைய வரலாறு செய்திகளுக்காக விளாத்திகுளம் நிருபர்,
-பூங்கோதை.