மக்களவைத் தேர்தலையொட்டி தூத்துக்குடியில் வேட்பாளர் சிவசாமி வேலுமணியை ஆதரித்து பிரசாரத்தில்; 2019-ல் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக மதுரையில் அடிக்கல் நாட்டினார் பிரதமர். அப்போது பிரதமருடன் அமர்ந்திருந்த நான் சிரித்துக் கொண்டிருந்தேன். அதை உதயநிதி ஸ்டாலின் கொச்சைப்படுத்தி, நான் பல்லைக் காட்டிக்கொண்டு இருப்பதாக கூறினார். சிரித்தால் என்ன தெரியும்? பல்லு தானே தெரியும். நீங்கள் காட்டினால் சரி, நான் காட்டினால் தவறா?”
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தென் மாவட்டங்களில் வெள்ளம் பாதித்தபோது, தூத்துக்குடி மக்களை நேரில் சந்தித்து நான் ஆறுதல் கூறினேன். எங்கு பார்த்தாலும் தண்ணீர் மற்றும் வெள்ளத்தால், கடல்போல் தூத்துக்குடி நகரம் காட்சி அளித்துக் கொண்டிருந்தது. மக்களை நேரில் சந்தித்து நான் ஆறுதல் கூறினேன்.
நான் தூத்துக்குடிக்கு வருகிறபோதே, என்னால் முடிந்த நிவாரணப் பொருட்களை கொண்டு வந்தேன். ஆனால் அந்த நிவாரணப் பொருட்களை இறக்கக்கூட முடியவில்லை. இடுப்பளவு தண்ணீர் சூழந்திருந்தது. அப்படியிருந்தும் மக்களுக்கு நிவாரணப் பொருட்களை நான் வழங்கிவிட்டுச் சென்றேன். எதற்காக சொல்கிறேன் என்றால், ஒரு அரசாங்கம் என்பது மக்கள் பாதிக்கப்படும்போது ஓடோடி வந்து உதவி செய்ய வேண்டும்.
அதிமுகவும் தேமுதிகவும் இணைந்து பலம் வாய்ந்த கூட்டணியாக மாறியுள்ளது. திமுக ஆட்சியில் ஒரு புயலையே அவர்களால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. ஒரு புயலுக்குக் கூட தாங்காதது திமுக.
பாஜகவுடன் கள்ளக்கூட்டணி வைத்துள்ளதாக மு.க. ஸ்டாலின் கூறுகிறார். நரேந்திர மோடி – மு.க. ஸ்டாலின் சந்தித்த படங்களை காண்பித்து, யார் கள்ளக்கூட்டணி வைத்துள்ளனர் என்று கேள்வி எழுப்பினார்.
பாஜவுடன் கூட்டணி வைக்கவேண்டும் என்றால் வைத்திருப்பேன்; ஆனால், அந்த அவசியம் ஏற்படவில்லை. சுதந்திரமாக செயல்பட்டதால்தான் பாஜக கூட்டணியிலிருந்து விலகியுள்ளோம்.
முதல்வர் ஸ்டாலின் எப்போது பேசினாலும் அதிமுக கள்ளக் கூட்டணி வைத்திருப்பதாக விமர்சனம் செய்து வருகிறார். அவருக்கு கள்ளக் கூட்டணி வைத்துக்கொள்கிற பழக்க தோஷம் இருக்கும்போலத் தெரிகிறது. இதுவரைக்கும் எந்த கட்சித் தலைவரும் இப்படி கூறியது கிடையாது. கள்ளக் கூட்டணி வைத்தது யார் என்பதை இந்த நேரத்தில் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்
-முனியசாமி.