VAO-க்கு லஞ்சம் கொடுக்காததால் வெள்ளத்தில் பலியான 150 ஆடுகளுக்கு நிவாரணம் வழங்கவில்லை : கலெக்டரிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை என்று கிராம மக்கள் வேதனை.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் பெய்த அதிகனமழை காரணமாக மாவட்டத்தின் பல இடங்களில் பொதுமக்கள் தங்களது குடியிருப்புகள், உடைமைகள் என அனைத்தும் மழை வெள்ளத்தில் மூழ்கி வாழ்வாதாரத்தை இழந்து பெரும் சோகத்திற்குள்ளாகினர். இதனைக் கருத்திற்கொண்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ள பாதிப்புகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்ததோடு நிவாரணப்பணிகளையும் முடுக்கிவிட்டார். அதில் குறிப்பாக மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த கால்நடைகளுக்கும் மாவட்டம் முழுவதும் நிவாரணத்தொகை வழங்கப்பட்டது. ஆனால், தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் தாலுகாவிற்குட்பட்ட தாப்பாத்தி கிராமத்தில் மட்டும் அங்கு பணிபுரிந்து வரும் VAO முத்துராஜ் என்பவர் லஞ்சம் கேட்டு பணம் கொடுக்காததால் மழை வெள்ளத்தில் உயிரிழந்த சுமார் 150 ஆடுகளுக்கு நிவாரணத்தொகை வழங்கப்படவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும், மற்ற கிராமங்களில் கால்நடைகளுக்கு நிவாரணத்தொகை வழங்கும்போது எங்களுக்கு ஏன் வழங்கவில்லை என VAO முத்துராஜிடம் பொதுமக்கள் கேட்டதற்கு, லஞ்சம் கொடுக்காத கோபத்தில் “நீங்கள் காலதாமதமாக வந்துள்ளீர்கள்… உங்களுக்கெல்லாம் பணம் வராது..” என மழுப்பலாக பதில் கூறியுள்ளார். இதுகுறித்து எட்டையபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் முறையிட்டும் எந்த பலனும் இல்லாத நிலையில், தாப்பாத்தி கிராம மக்கள் மழையால் உயிரிழந்த தங்களது ஆடுகளுக்கு நிவாரணத்தொகை வழங்கவேண்டும் என்றும், கிராம நிர்வாக அலுவலர் முத்துராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தும் தற்போது வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் உயிரிழந்த கால்நடைகளுக்கு நிவாரணத்தொகை வழங்கும் இந்த தமிழக அரசு தங்களுக்கு மட்டும் வழங்கவில்லை என பொதுமக்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.
அதுமட்டுமின்றி, மழையால் ஏற்கனவே கால்நடைகளை இழந்து சோகத்திலிருந்த மக்களிடம் அதற்கான நிவாரணம் வழங்குவதற்கும் லஞ்சம் கேட்ட விஏஓ முத்துராஜை பணி நீக்கம் செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தங்களுக்கு மறுக்கப்பட்ட நிவாரணத்தொகையும் வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
விளாத்திகுளம் நிருபர்
-பூங்கோதை.