வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி அன்று நடைபெற உள்ள பாராளுமன்ற பொது தேர்தலுக்கான ஏற்பாட்டினை இந்திய தேர்தல் ஆணையம் முழு வீச்சில் செய்து வருகின்றது.
இதன்ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் இந்து நாடார் உயர்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தின் ஏற்படுத்த வேண்டிய அடிப்படை வசதிகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் பணிகளை தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான லட்சுமிபதி நேரில் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது விளாத்திகுளம் தேர்தல் வட்டாட்சியர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-பூங்கோதை, விளாத்திகுளம்.