கோவை மாவட்டம் பொள்ளாச்சி, ஆனைமலை, கோட்டூர், மலையாண்டிபட்டணத்தில் ஸ்ரீ சத்திய சாயி சேவா சமிதி அலுவலகத்தில் மாபெரும் இலவச கண் மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. அரவிந்த் கண் மருத்துவமனையும் ஸ்ரீ சத்தியசாய் சேவா சமிதியும் இணைந்து ஆனைமலை ஒன்றியத்துக்குட்பட்ட கோட்டூர் மலையாண்டிபட்டணத்தில் உள்ள ஸ்ரீ சத்திய சாயி சேவா சமிதி அலுவலகத்தில் மாபெரும் இலவச கண் மருத்துவ முகாம் மார்ச் 3ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் மதியம் ஒரு மணி வரை நடைபெற்றது.
இந்த முகாமில் 150 மேற்பட்ட பயனாளிகள் கலந்து கொண்டனர். மேலும் இந்த முகாமில் கண் புரை, கண்ணீர் அழுத்தம் , கண்களில் நீர் வடிதல், மாலைக்கண் மாறுகண், கண்களில் ஏற்படும் அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளித்தனர். முகாமில் 35 பயனாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்ய தேர்வு செய்யப்பட்டனர் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளை கோவை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
–சின்ன முத்துசாமி.ஆனைமலை.