கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை பகுதியில் உள்ள நடு மலை, கருமலை, வெள்ள மலை, பூசி மலை, அக்கா மலை ஆகிய பகுதிகளுக்கு செல்லக்கூடிய சாலையில் குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது இதனால் சாலையின் அருகில் குழிகள் தோண்டப்பட்டு அந்தப் பந்தல் சாலையின் ஓரத்தில் கொட்டப்பட்டுள்ளன இதனால் இப்பகுதியில் செல்லக்கூடிய இருசக்கர வாகன ஓட்டுநர்கள் மண் சறுக்கி கீழே விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும் நான்கு சக்கர வாகனங்கள் செல்லும்பொழுது மண்புழுதி ஏற்பட்டு பின்னால் வரும் வாகனங்களுக்கு சாலை சரியாக தெரிவதில்லை இதனால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது இதனைக் கண்டு பொதுமக்கள் பல முறை புகார் கூறியும் துறை அதிகாரிகள் சரியான முறையில் பதில் அளிக்கவில்லை மேலும் பணி முடிந்த இடங்களில் குழிகளை சரியாக மூடிவிட வேண்டும் வளைவுகளில் மண் சரிவால் வாகன ஓட்டுனர்கள் மிகுந்த சிரமத்துக்குள் ஆளாகும் அவளை நிலை உருவாகியுள்ளது எனவே இதனைக் கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திக்காக வால்பாறையில் இருந்து
-திவ்யக்குமார்.