கோவை சிங்காநல்லூர் வரதராஜபுரம் ஆண்டாள் அம்மாள் லே-அவுட்டை சேர்ந்தவர் செந்தில்குமார்(43). பழ வியாபாரி. நேற்று இவரது ஒரு வயது 3 மாதமான கீதா என்ற பெண் குழந்தை வீட்டில் விளையாடி கொண்டிருந்தது. அப்போது குளியலறையில் இருந்த தண்ணீர் நிரப்பிய வாளியில் குழந்தை எதிர்பாராமல் தவறி விழுந்தது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மூச்சுத்திணறி சுயநினைவை இழந்த குழந்தையை மீட்டு பெற்றோர் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 1 வயதேயான குழந்தை தண்ணீர் வாளியில் மூழ்கி பலியான சம்பவம் பெற்றோர் மட்டுமின்றி அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.