பொள்ளாச்சி மீன்கரை சாலையில் தனியார் பள்ளி பேருந்தும் இருசக்கர வாகனமும் மோதி விபத்து…

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை மீன்கரை சாலை சத்தி சோயாஸ் சாஸ்தா பேக்கரி அருகே தனியார் பள்ளி பேருந்தும் இருசக்கர வாகனமும் மோதி விபத்து. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த இருவருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது இதனை அடுத்து தகவல் அறிந்து விரைந்து வந்த சாமி ஆம்புலன்ஸ் மற்றும் துணிவே துணை ஆம்புலன்ஸ் மூலம் இருவரையும் மீட்டு அம்பராம்பாளையம் ஆல்வா மருத்துவமனைக்கு ஒருவரையும் மற்றொருவரை பொள்ளாச்சி அரசு பொது மருத்துவமனைக்கும் கொண்டு சென்றனர்.

இந்த விபத்தில் பள்ளி வாகனத்தின் முகப்பு கண்ணாடிகள் தூள் தூளாக உடைந்தன அதிர்ஷ்டவசமாக பள்ளிக் குழந்தைகளுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை உடனடியாக வேறொரு பள்ளி வாகன வரவழைக்கப்பட்டு குழந்தைகளை பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிகிறது. விபத்தில் காயம் அடைந்த இருவரும் கேரள மாநிலம் கொல்லங்கோடு கோவிந்தாபுரம் அடுத்த புதூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. மேலும் விபத்து குறித்து ஆனைமலை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளிப் பேருந்தும் இருசக்கர வாகனமும் மோதி கொண்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மிதமான வேகம் பாதுகாப்பான பயணம் வேகத்தை குறைப்போம் மகிழ்ச்சியாய் வாழ்வோம்
என்ற சிந்தனையோடு

தமிழக துணைத் தலைமை நிருபர், பொள்ளாச்சி
M.சுரேஷ்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp