கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை அடுத்துள்ள முருகாலி எஸ்டேட் பகுதியில் நிரந்தர தொழிலாளியாக பணிபுரிந்து வந்தவர் ராஜு. இவரது மகன் அருண் வயது 45 இன்று காலை எட்டு மணி அளவில் வேலைக்கு சென்று பணியாற்றிக் கொண்டிருந்தார். அந்த சமயம் சுமார் எட்டு நாற்பத்தி ஐந்து மணி அளவில் அவர் வேலை செய்து கொண்டு இருந்த பகுதியில் காட்டுமாடு ஒன்று வந்தது.
அப்போது அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த அருனை முட்டி தூக்கி விசியது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதனால் அப்பகுதியில் பணியாற்றிக் கொண்டிருந்த தேயிலைத் தோட்ட தொழிலாளிகள் மிகுந்த கவலையுடன் உள்ளனர். இச்சோக சம்பவம் சோலையார்டேம் சேர்க்கல் முடி புதுக்காடு கல்யாண பந்தல் முருகாலி பகுதிகளில் மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது போன்ற சம்பவங்களை வராமல் தடுக்க வனத்துறையினர் சோலைகளின் பகுதியில் தேயிலைத் தோட்ட பணியாளர்கள் பணியாற்றுவதற்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-திவ்யக்குமார், வால்பாறை.