கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு பகுதியில் புலியின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது, கடந்த தினம் எல்லப்பட்டி பகுதியில் இருந்து சிட்டிவாரை பகுதியை நோக்கி பால் வியாபாரத்திற்காக சென்ற வாகனத்தில் பயணித்த நபர் தான் புலியை நேரில் பார்த்தது. புலியை பார்த்தவுடன் புகைப்படம் எடுப்பதற்காக கைப்பேசி எடுக்கும் பொழுது புலி ஓடியது. இதனால் புகைப்படம் எடுக்க முடியவில்லை புலியின் கால் தடங்கலை புகைப்படமாக எடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து இன்றைய தினம் காலை 7:30 மணி அளவில் செண்டுவாரை பகுதியில் காலையில் புலியை கண்டதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.புலி நடமாட்டம் அதிகரித்து தொடர்ந்து பொதுமக்கள் அனைவரும் பயத்துடன் இருக்கின்றார்கள்.
நாளை வரலாறு செய்திக்காக,
-மணிகண்டன் கா. கேரளா,மூணாறு.