கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டம் வால்பாறையை அடுத்து உள்ள நல்ல காத்து எஸ்டேட் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இது போன்ற சம்பவம் அதிகளவு வால்பாறை வட்டார பகுதிகளில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்கு காரணம் மின்கசிவு குடியிருப்பு பகுதியில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு கொடுக்க பட்டு பல வருடங்கள் ஆகிவிட்டன எனவே மின் இணைப்பில் உள்ள ஒயர்கள் எங்காவது பழுது ஏற்பட்டிருக்கும் இதுபோன்ற சூழ்நிலையில் மின்தசிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் தான் சில சமயங்களில் மின் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்படுகிறது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தீ விபத்து ஏற்பட்டதும் எஸ்டேட் பகுதியில் உள்ள அதிகாரிகள், எஸ்டேட் பொதுமக்கள் விரைந்து வந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர் ஆறு வீடுகள் கொண்ட அந்த குடியிருப்பில் வீட்டுக்குள் இருந்த பொருட்கள் மிகவும் சேதாரம் ஆகிவிட்டது இது வால்பாறை வட்டார பகுதிகளில் அதிக அளவு நடந்து கொண்டிருக்கிறது இது போன்ற சம்பவங்களை தடுக்க எஸ்டேட் நிர்வாகத்தினர் தீயணைப்பு கருவிகள மணல் தண்ணீர் முதல் உதவி பெட்டி ஆகியவை ஒவ்வொரு குடியிருப்புகள் கொண்ட வீடுகளிலும் வைக்க வேண்டும் அதை சுகாதார ஆய்வாளர் கண்காணிக்க வேண்டும் தீயணைப்பு ஆய்வாளர்களும் கண்காணிக்க வேண்டும் தீயணைப்பு கருவிகள் இருந்தால் விபத்துகளை வராமல் தடுப்பதற்கு உதவியாக இருக்கும். மேலும் கோடை காலங்களில் தண்ணீர் கிடைப்பது மிகவும் கடினம் ஆகையால் இது போன்ற சம்பவங்களை வராமல் தடுக்க மாவட்ட ஆட்சியாளர் ஆய்வாளர் மற்றும் அதிகாரிகள் கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் வியாபார பெருங்குடி மக்கள் வாகன ஓட்டுனர்கள் ஆட்டோ ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்தனர்.
நாளைய வரலாறு செய்திக்காக
வால்பாறையில் இருந்து
-திவ்யக்குமார்.