தூத்துக்குடி மாவட்டம் வேம்பாரில் அ.தி.மு.க வேட்பாளர் சிவசாமி வேலுமணி ஆதரித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ பேசிய போது எடுத்த படம்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தூத்துக்குடி மக்களவைத் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் ஆர்.சிவசாமி வேலுமணி நேற்று காலை மேல்மாந்தை, எம்.சண்முகபுரம், சூரங்குடி, சிலுவையுரம், பெரியசாமிபுரம், பச்சையாபுரம், வேம்பார் குளத்தூர் ஆகிய கிராமங்களில் பிரச்சாரம் செய்தார். தொடர்ந்து நேற்று மாலையில் கமலாபுரம், சிவஞானபுரம், பொம்மையாபுரம், எப்போதும்வென்றான், காட்டுநாயக்கன்பட்டி, ஆதனூர், கொல்லம்பரும்பு, முள்ளூர், வேடநத்தம், கே.சண்முகபுரம் பகுதிகளில் மக்களை சந்தித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
அப்போது அவருக்கு ஆதரித்து வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் கடம்பூர் செ.ராஜூ எம்.எல்.ஏ. பேசியதாவது: இந்திய துணை கண்டத்தில் அதிக உறுப்பினர்களை கொண்ட கட்சியாக அதிமுக உள்ளது. ஜனநாயக முறைப்படி தான் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதிமுகவில் கட்சியில் வாரிசுகளுக்கு வேலை இல்லை. திமுகவில் ஜனநாயகம் எங்கு இருக்கிறது. சாதாரண தொண்டர்களுக்கு அதிமுக வாய்ப்பளிக்கும். உழைப்பவர் உயரலாம் என்ற கொள்கை கொண்ட கட்சி.
அதிமுகவில் வேட்பாளர் அறிவிப்புக்கு பின்னர் முதன் முதலாக பொதுச்செயலாளர் பிரச்சாரம் செய்தது தூத்துக்குடியில் தான். அப்போது மக்கள் அதிகளவு திரண்டிருந்தனர். அதன் பின்னர் திமுகவுக்கு பயம் வந்துவிட்டது. திமுக கதிகலங்கி தோல்வி பயத்தில் உள்ளது. மக்களை சந்திக்க பயந்து போய் உள்ளனர். எங்கு சென்றாலும் அமைச்சர்களை மக்கள் விரட்டுகின்றனர்.
தமிழகத்தில் அதிக ஆண்டுகள் ஆண்ட கட்சி அதிமுக தான். ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்கள் பணியை செய்து வருகிறோம். தற்போது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது. விலைவாசி உயர்ந்து விட்டது.
பாலியல் வன்கொடுமை அதிகரித்துள்ளது. ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் சட்டவிரோத செயல்களை தடுக்க வேண்டும். ஜாபர் சாதிக் போதை பொருட்கள் கடத்தி பிடிபட்டுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அவர் ஜோராக போதை பொருள் கடத்தி வந்துள்ளார். அந்த போதை பொருளால் தமிழ்நாடே தள்ளாடிக் கொண்டிருக்கிறது. ஜாபர் சாதிக்கை போதை பொருள் கட்டுப்பாட்டு பணியக போலீஸார் டெல்லியில் வைத்து கைது செய்துள்ளனர். ஏன் தமிழ்நாடு போலீஸார் பிடிக்கமாட்டார்களா?. அவர்கள் ஸ்காட்லாண்ட் போலீஸாருக்கு இணையானவர்கள்.
ஆனால், அதிகாரத்தில் உள்ளவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டால் இங்கே எப்படி பிடிபடுவார். விசாரணை முடிவில் அனைத்து தெரியவரும். மக்களை பாதுகாக்க வேண்டிய அரசே சட்டவிரோத காரியங்களுக்கு துணை போகிறது. தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் ஆறாக ஓடுகிறது. இதனால் தான் கொலை, கொள்ளை, பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் நடக்கின்றன. அதிமுக வேட்பாளர் தான் மண்ணின் மைந்தன். இவர் தான் உள்ளூர் வேட்பாளர்.
இவர் வெற்றி பெற்றால் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் மக்களவைத் தொகுதி உறுப்பினர் அலுவலகம் நிச்சயம் திறக்கப்பட்டு இயங்கும். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து அ.தி.மு.க வேட்பாளர் பேசியதாவது, சிவகாமி வேலுமணி கூட்டணி கட்சி நிர்வாகிகளோடு வாக்கு சேகரிக்க வந்துள்ளேன் அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற எந்தவித சந்தேகமும் இல்லை.
கனிமொழி பெரிய இடத்து இடம் நம்மால் பார்க்க இயலாது எந்தவித குறையும் சொல்ல முடியாது உங்களை சந்திக்கவும் மாட்டார்கள். நான் உங்க ஊர் வேட்பாளர் எப்போதும் என்னை சந்திக்கலாம். நான் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் அலுவலகம் அமைத்து உங்கள் குறைகளை உடனடியாக தீர்த்து வைப்பேன். இதனால் உங்கள் வாக்குகளை இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து அமோக வெற்றி பெற செய்ய வேண்டுகிறேன் இவ்வாறு அவர் பேசினார்.
அப்போது மாநில அமைப்புச் செயலாளர் வர்த்தக அணி மாநில செயலாளர் வர்த்தக அணி செயலாளர் சி.தா.செல்லப்பாண்டியன் முன்னாள் எம்.எல்.ஏ சின்னப்பன், ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் காமாட்சி என்ற காந்தி, வடக்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் பால்ராஜ் உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்,
-முனியசாமி.