தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேருந்து நிலையத்தில் உள்ள மின் விளக்குகள் எரியாததால் பேருந்து நிலையம் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் விளாத்திகுளத்தில் இருந்து மற்ற பகுதிகளுக்கு செல்வதற்காக பேருந்து நிலையம் வந்த பயணிகள் பெரிதும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
அதுமட்டுமின்றி பேருந்து நிலையத்தில் பேருந்துகள் வெளியே செல்லும் நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டுள்ள பெயர் பலகையிலும் கூட மின்விளக்குகள் எரியாமல் காட்சியளிக்கிறது. ஏற்கனவே விளாத்திகுளம் பேருந்து நிலையத்தில் போதுமான மின்விளக்குகள் இல்லாமல் இருக்கக்கூடிய சூழ்நிலையில் தற்போது உள்ள விளக்குகளும் இதுபோன்ற அடிக்கடி எரியாமல் இருப்பதால் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்லும் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாக தெரிவிக்கின்றனர்.
ஆகையால், உடனடியாக பேருந்து நிலையத்தின் உட்புறத்தில் எரியாமல் இருக்கக்கூடிய மின்விளக்குகளை சரிசெய்வதோடு மட்டுமின்றி கூடுதலான உயர்கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
விளாத்திகுளம் பகுதி நிருபர்
-பூங்கோதை.