கோவை காந்திபுரத்தில் இரண்டு பேருந்துகளுக்கு இடையே சிக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை காந்திபுரம் டவுன் பேருந்து நிலையத்தில், குறிப்பிட்டு பேருந்தை பிடிப்பதற்காக மக்கள் அலைமோதிக் கொள்வது வழக்கம். அப்படி, ஒரு நபர் பேருந்து நிலையத்தின் இடது புறம் இருந்து, இரண்டு பேருந்துகளுக்கு இடையே புகுந்து, வலதுபுறம் செல்ல முயற்சித்தார்.
இதனை அறியாத, மது போதையில் முன்னால் இருந்த பேருந்து ஓட்டுனர் பேருந்தை பின்னோக்கி இயக்க, இரு பேருந்துகளின் இடையே அந்த நபர் சிக்கி உடல் நசுங்கி, பலியானார்.
மது போதையில் இப்படி விபத்தை ஏற்படுத்திய டிரைவரை பார்த்து கொதிப்படைந்த சக டிரைவர்கள், பொதுமக்கள் குடிபோதை ஆசாமியை கடுமையாக தாக்கி உள்ளனர்.
இந்த சம்பவம், அங்கிருந்த பயணிகள் மத்தியில் சோகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. சாலையை சட்டென கடந்து விடலாம் என நாம் நினைக்கும் நொடிப்பொழுது நம்மை இப்பூவுலகில் இருந்து பிரித்துவிடும் அளவுக்கு கொடூரமான என்பதை நாம் அனைவரும் இந்த விபத்தில் இருந்து உணர்வோம். பொறுமைகாப்போம். விபத்து குறித்து காட்டூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.