தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். அதனை முன்னட்டு தமிழகம் முழுவதும் திராவிட முன்னேற்ற கழகம் சார்பாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் நீர்மோர் பந்தல் அமைத்து பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கி சேவை செய்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் ஆனைமலை முக்கோணத்தில் திமுக கட்சி சார்பாக பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மே ஐந்தாம் தேதி இன்று மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ஏ ஆர் வி சாந்தலிங்க குமார் தலைமையில் நீர் மோர் பந்தல் துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் நீர்மோர், இளநீர், தர்பூசணி போன்றவை பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.
இதில் ஆனைமலை பேரூராட்சித் தலைவர் கலைச்செல்வி, பேரூராட்சி துணைத் தலைவர் AH. ஜாபர்அலி,கழக அவைத்தலைவர் சிங்காரம்சீனிவாசன், கவுன்சிலர்கள் வெள்ளைமுத்து குபேந்திரன் மற்றும் சாகுல் அமீது, செல்வராஜ், பாலகிருஷ்ணன், ஹக்கிம், அக்ரி சகாப்தின், ஏ பி விக்னேஷ் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்,மேலும் இந்த நிகழ்ச்சியில் ஆனைமலை பேரூராட்சித் தலைவர் கலைச்செல்வி தானாகவே முன்வந்து தனது கரங்களால் பொதுமக்களுக்கு இளநீர் வெட்டி கொடுத்து பொது மக்களை நெகிழ்ச்சியடையச் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
-P.சின்ன முத்துசாமி, ஆனைமலை.