கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு கோவிலூர் வட்டவடை அருகில் உள்ள சிலந்தியாரில் கனகராஜ் என்ற நபரின் 40 ஆடுகளை செந்நாய்கள் தாக்கியது. நேற்று மாலை 5 மணிக்கு தான் செந்நாய்கள் கூட்டங்கள் ஆடுகளை தாக்கியது.
ஆடுகளை மேய்ச்சல் இருந்து வீட்டிற்கு அழைத்து வருவதற்காக கனகராஜ் அவர்கள் சென்று நோக்கிய போது அனைத்து ஆடுகளும் இறந்த நிலையில், ஒரு சில ஆடுகள் எலும்பு துண்டுகள் மட்டுமே அங்கு காணப்பட்டது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக பலத்தோட்டம் அருகில் நான்கு பசுக்களையும் இதுபோல செந்நாய்கள் கூட்டம் ஒரு கிலோ மீட்டர் அளவில் சுற்றி வளைத்தது அந்தப் பகுதியில் இருந்த பொதுமக்கள் அனைவரும் இதைக்கண்ட செந்நாய்களை விரட்டி காட்டிற்குள் அனுப்பினார்.
ஹைரேஞ்ச் மற்றும் மூணாறு பகுதிகளில் யானைக் கூட்டம் மற்றும் புலியின் தாக்குதல் அதிகரிப்பை தொடர்ந்து இப்பொழுது புதிதாக செந்நாயிகளின் தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. கனகராஜ் என்ற நபர் ஆடுகளை மட்டுமே மேய்த்து தனது வாழ்க்கைகளை நடத்தி வந்தார் இப்பொழுது ஆடுகள் எல்லாம் இழந்ததை அடுத்து என்ன செய்வது எங்கு பதில் கேட்பது என தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார். இதற்காக சம்பந்தப்பட்ட நபர்கள் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-மணிகண்டன் கா, மூணாறு.