மூணாறு செண்டுவாரை திரு இருதய தேவாலயத்தில் இயேசுவின் திருஇருதய திருவிழா நடைபெற்றது!!!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு பகுதியில் அருகில் அமைந்துள்ள செண்டுவாரை எஸ்டேட் 2024 ஏப்ரல் 30 மற்றும் மே 1 தேதிகளில் வெகு விமர்சியாக 101-ம் ஆண்டு திருவிழா நடைபெற்றது. செண்டுவாரை எஸ்டேட் திரு இருதய ஆண்டவர் ஆலய திருவிழா 2024 ஏப்ரல் 30 மற்றும் மே 1 தேதிகளில் கொண்டாடப்படுகிறது. ஆண்டவர் நமக்கு அருளிய எண்ணில்லா நன்மைகளுக்கு நன்றி கூறவும், இயேசுவின் திருஇருதயத்திற்கு ஜெபங்களையும் அர்ப்பணித்து இறை ஆசீரை பெறுவதற்காக பொதுமக்கள் மற்றும் தேவாலய பொதுமக்கள் அனைவரும் மிகவும் சிறப்பான முறையில் திருவிழாவை கொண்டாடினர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

29-04-2024 திங்கள் மாலை ஜெபமாலை பிரார்த்தனைகளுடன் திருவிழா துவங்கப்பட்டது.
30-04-2024 செவ்வாய் மாலை 4 மணிக்கு கொடிபவனி செண்டுவாரை சூப்பர் ஃபேக்டரி டிவிஷனில் இருந்து தேவாலயத்திற்கு கொண்டுவரப்பட்டது. பின்னர் தேவாலயத்தில் கொடியேற்றப்பட்டது கொடியேற்றம் தலைமை அருட்தந்தை, டின்டோ . பின்னர் ஆடம்பர திருப்பலி நடைபெற்றது அருட்தந்தை. அலெக்ஸாண்டர் சோஜன் மற்றும் செண்டுவாரை மண்ணில் பிறந்து அருட்தந்தை பணியாற்றும் விக்டர் மேஜர் அவர்களும் ஆடம்பர திருப்பலி நிறைவேற்றினார். திருப்பலியின் நிறைவில் தியானங்களும் நடைபெற்றது,குடும்ப நவீகரண தியானம் தலைமை அருட்தந்தை, ஆண்டனிராஜ் கன்னிசேரி.

01-05-2024 அன்று காலை 09.30 மணிக்கு ஜெபமாலை பிரார்த்தனைகளுடன் தேவாலயத்தில்
10.00 am. ஆடம்பரத் திருப்பலி அருட்தந்தை, பிரான்சிஸ் கம்போளத் பங்குத்தந்தை, பாத்திமா மாதா தேவாலயம், சின்னக்கானல் தலைமையில் நிறைவேற்றப்பட்ட இறுதியாக சப்பர ஊர்வலம் நடைபெற்றது சப்பர ஊர்வலத்தில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் கிறிஸ்தவ விசுவாசிகள் பங்கு பெற்றனர் இறுதியாக அன்னதானங்களும் வழங்கப்பட்டது.

எல்லப்பட்டி தேவாலயத்தின் கிளைப் பங்கில் தான் செண்டுவாரை எஸ்டேட் தேவாலயம் இணைந்துள்ளது. தேவாலயத்தின் பங்கு தந்தை அலெக்சாண்டர் மற்றும் துணை பங்கு தந்தை டின்டோ இவர்கள் தலைமையில் தான் இந்த வருடம் திருவிழா கொண்டாடப்பட்டது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-மணிகண்டன் கா

மூணாறு,கேரளா

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp