சென்னை: ‘பிரஸ்’, ‘காவல்’ போன்ற ஸ்டிக்கர்களை வாகனத்தில் பயன்படுத்துவோர், அரசு துறைகள் மற்றும் பிற தொழில்களில் ஈடுபடுவதால், பாதுகாப்பு உள்ளிட்ட சிக்கல்கள் நேர வாய்ப்பிருக்கும் . எனவே ஸ்டிக்கர்களை நீக்கச் சொல்லியும் மீறினால் மே 2 முதல் இதுபோன்ற ஸ்டிக்கர்களைப் பயன்படுத்தும் வாகன பயனர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சென்னை போக்குவரத்துக் கழகம் (ஜிசிடிபி) எச்சரித்திருந்தது.
இதுகுறித்து ,
தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் நலச்சங்கம் மேற்கண்ட அறிவிப்பிலிருந்து பத்திரிகையாளர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என வேண்டுகோள் வைத்தது. மேற்கண்ட வேண்டுகோளைத் தொடர்ந்து, ஊடகத்தினர் தமிழக அரசால் வழங்கப்பட்ட PRESS / MEDIA என்ற ஸ்டிக்கர்களை வாகனத்தில் ஒட்டிக் கொள்ள அனுமதி அளித்தது சென்னை மாநகர காவல்துறை. ஆனால், வாகனம் ஊடகத்தில் பணியாற்றுபவரின் பெயரில் இருந்தால் மட்டுமே PRESS ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்ள அனுமதிப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
வாகன எண் தகட்டில் (Number Plate) அரசு விதிமுறைப்படியான வாகன எண் தவிர வேறு எழுத்தோ, சொல்லோ இடம் பெற்றிருந்தால், முதல் முறை ₹ 500/-ம் அதன் பின்னர் பிடிபட்டால் ₹ 1500/-ம் அபராதமாக விதிக்கப்படும். ஊடகத்துறையினர் ஊடகம் என்பதை எண் தகட்டைத் தவிர்த்து வாகனத்தின் பிற பகுதிகளில் மட்டுமே ஒட்ட வேண்டும்.
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
செய்தியாளர்:
–சோலை.ஜெய்க்குமார் & Ln.இந்திராதேவி முருகேசன், கோவை.