உக்கடத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தைச் சுற்றிப்பார்க்கச் சென்ற சிறுவர்கள் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வகையில் பக்ரீத் விடுமுறை தினமான இன்று குறிச்சி பிரிவு இட்டேரி பகுதி சேர்ந்த 4 சிறுவர்கள் ஒரே பைக்கில், மேம்பாலத்தைச் சுற்றிப்பார்க்கப் புறப்பட்டனர். அவர்கள் மேம்பாலத்தில் வாகனத்தில் வலம் வந்தபோது, பக்கவாட்டு தடுப்புச்சுவரில் மோதி, கீழே விழுந்தனர்.
இதில் இரண்டு சிறுவர்கள் படுகாயமடைந்தனர். 2 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இது அப்பகுதி மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. தற்போது மேம்பாலத்தில் யாரும் ஏற முடியாத வகையில் தடுப்புகளை போலீசார் அமைத்துள்ளனர்.
திருச்சி சாலை மேம்பாலம் திறக்கப்பட்ட போது தொடர் விபத்துகள் ஏற்பட்ட நிலையில், அந்த மேம்பாலத்தில் விபத்துகளைத் தடுக்க நெடுஞ்சாலைத்துறை பல்வேறு மேம்பாட்டுப் பணிகளை மேற்கொண்டது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.