தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் – சோலையம்மாள் தம்பதியினரின் 2 மகள்களுக்கு நேற்றைய தினம் காதணி விழா விளாத்திகுளத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து இன்று சதீஷ்குமாரின் குடும்பத்தினர் மற்றும் விழாவிற்கு வந்திருந்த உறவினர்கள் சிலர் விளாத்திகுளம் அருகே உள்ள வேம்பார் கடலில் குளிக்கச் சென்றுள்ளனர். இவர்கள் வேம்பார் கிழக்குத் தெருவில் அமைந்துள்ள கடலின் முகத்துவாரத்தில் குளித்துக் கொண்டிருந்தபோது கடல் அலையின் சீற்றம் அதிகமாக இருந்த காரணத்தால் 5 வயது சிறுமி சாதனா கடலில் மூழ்கியுள்ளார், அப்போது சிறுமியை காப்பாற்ற முயன்ற சிறுமியின் சித்தப்பா டேனி என்ற 25 வயது இளைஞரும் கடல் அலையில் சிக்கி மூழ்கியுள்ளார்… இதுபற்றி தகவல் அறிந்த கடலோர வேம்பார் காவல் படை போலீசார் உடனடியாக அங்கு சென்று 5 வயது சிறுமி சாதனா மற்றும் அவரது சித்தப்பா டேனியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் கடலோரக்காவல் படை போலீசார் முதலில் டேனியின் உடலை இறந்த நிலையில் மீட்டனர். தொடர்ந்து சிறுமி சாதனாவின் உடலையும் இறந்த நிலையில் கண்டெடுத்தனர். இதைத்தொடர்ந்து இருவரின் உடல்களையும் விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து இச்சம்பவம் தொடர்பாக வேம்பார் கடலோரக்காவல் படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அது மட்டுமின்றி, நேற்றைய தினம் குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சியாக காதணி விழாவில் பங்கேற்ற நிலையில் இன்று கடலுக்கு குளிக்க சென்ற இடத்தில் கடல் அலையில் சிக்கி 5 வயது சிறுமி உட்பட 2 பேர் உயிரிழந்த சம்பவம் இப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. (மேலும், கடல் அலையின் சீற்றம் அதிகமாக இருக்கக்கூடிய இச்சூழ்நிலையில் வேம்பார் கடலோர காவல் படை போலீசார் சார்பில் இப்பகுதிகளில் குளிக்கத்தடை, ஆபத்து அறிவிப்புப்பலகை போன்ற எந்தவொரு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாததன் காரணமாகதான் கடல் அலையில் சிக்கி 2 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.)
நாளைய வரலாறு செய்திகளுக்காக
விளாத்திகுளம் செய்தியாளர்
-ந.பூங்கோதை.