வால்பாறை அண்ணா நகரில் நகராட்சி மூலம் பொது கழிப்பிடம் கட்டப்பட்டு செயல்பட்டு வந்தது. தற்பொழுது சரி செய்வதற்காக நகராட்சி மூலம் பல லட்ச ரூபாய் செலவு செய்து கட்டிடம் கட்டப்பட்டது. புதுப்பிக்கப்பட்ட கட்டிடம் நேற்று பெய்த மழையில் இடிந்து அருகில் குடியிருந்த வீட்டில் இருப்பவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
மக்களின் வரிப்பணம் வீணாகிறது என்பது சாமானிய மக்களின் கேள்வியாக உள்ளது. நாமும் சாமானிய மக்களின் குரலை வேதனையோடு கேட்டு நேரில் ஆய்வு செய்யும் போது பொதுமக்கள் கூறியதாவது வால்பாறை நகராட்சியில் கட்டப்படும் கட்டிடங்கள். சாலைகள். அனைத்தும் தரமற்றதாகும் பேரளவுக்கு மட்டுமே செய்கிறார்கள்.
மக்கள் வரிப்பணத்தை வீணாகிறது ஒப்பந்ததாரர்களாக இருந்தாலும் நகர மன்ற உறுப்பினர்கள் அரசு அதிகாரிகள் யாராக இருந்தாலும் எதையும் பற்றி கவலைப்படாமல் சாமானிய மக்களின் அடிப்படைத் தேவைகளை செய்து கொடுக்காமல் எந்த வழியில் எவ்வளவு எளிதாக எப்படி பணம் எடுக்கலாம் என்ற கோணத்தில் தான் வேலைகள் நடைபெறுகிறது.
உதாரணமாக மக்களின் அடிப்படை தேவையான சாலை வசதிகள் ஊசிமலை, வெள்ளமலை, உபாசி ,சோலையார் டேம், சோலையார், மட்டும் எஸ்டேட் பகுதிகளிலும் சாலைகள் குண்டும் குழியுமாகவும் அவசர சிகிச்சை பெற முடியாமலும் வயதான பெரியவர்கள், கர்ப்பிணி பெண்கள், மாற்றுத்திறனாளிகள் அனைவரும் சிரமப்படுகின்றன எனவும். மக்களின் வரிப்பணத்தை சாமானிய மக்கள் பயன்பெறும் வகையில் செய்வதும் கிடையாது என்றும். கேட்பதற்கும் ஆளும் கிடையாது பொதுமக்கள் கூறுகின்றனர்.
பெரும்பாலானோர் நகராட்சி ஒப்பந்ததாரர்களாக கட்சியின் செல்வாக்கை பொறுத்து ஒப்பந்தத்தை பிரித்துக் கொள்கிறார்கள் தேர்தல் நேரத்தில் மட்டும் வேற்றுமையாக காட்டுவார்கள் மற்ற நேரத்தில் அனைவரும் நகராட்சி ஒப்பந்தத்தை வேலையை பிரித்துக் கொள்வார்கள்.
அதனால் தான் வால்பாறை நகராட்சி மூலம் கட்டப்படும் கட்டிடங்கள் சாலைகள் இதர பணிகளை சம்பந்தப்பட்ட அதிகாரி மற்றும் ஒப்பந்ததாரர் மீது தமிழக அரசோ, நகராட்சி நிர்வாகமும், மாவட்ட ஆட்சித் தலைவரோ வால்பாறை நகராட்சியில் தனிக்கவனம் செலுத்தி மக்கள் வரிப்பணத்தை வீணடிக்காமல் இருப்பார்களா என்று மனக்குமுறலுடன் கூறுகின்றனர் வரும் நாட்களில் பார்க்கலாம்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-வால்பாறை, பரமசிவம்.