தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆட்சியர் திடீர் ஆய்வு, மக்களை நாடி அவர்களின் குறைகளைத் தீர்க்க தமிழ்நாடு அரசின் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின்கீழ், இன்று புதியம்புத்தூர் அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமிபதி திடீர் ஆய்வு மேற்கொண்டு, வருகைப் பதிவேடு, புறநோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், மருந்து பொருட்களின் இருப்பு குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து புதியம்புத்தூர் T.N.D.T.A தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமிபதி நேரில் பார்வையிட்டு காலை உணவு திட்ட ஊழியர்களிடம் உணவுகள் சரியான முறையில் வழங்கப்படுகிறதா என்பது குறித்து கேட்டறிந்து, உணவருந்தினார்.
தொடர்ந்து கழுகாசலபுரம் காலனி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்கும் பணியினையும் புதியம்புத்தூர் ஊராட்சியில் பொதுமக்கள் பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீரின் அளவு மற்றும் குளோரின் சரியான அளவில் உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து புதியம்புத்தூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு ஆதார் ஆதார் அட்டை திருத்த முகாமை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
ஒட்டப்பிடாரம் நிருபர்.