கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி தீப்பற்றியது. அதனை மூன்று மாவட்டங்களை சேர்ந்த தீயணைப்பு துறையினர் அணைத்தனர். தீயை அணைக்க சுமார் 11 நாட்கள் ஆனது. இந்நிலையில் அந்த நாட்களில் சிற்றுண்டி செலவிற்கு மட்டும் 27 லட்சத்து 51 ஆயிரத்து 678 ரூபாய் செலவு செய்துள்ளதாக மாநகராட்சி ஒப்புதல் தீர்மான நகலில் குறிப்பிடப்பட்டுள்ளது.கோவை மாநகராட்சியில் சாதாரண மாமன்ற கூட்டம் மாநகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 333 தீரமானங்கள் கொண்டுவரபட்டது.அதில் கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் கடந்த 6.04.2024 முதல் 17-04-2024 ஆம் தேதி வரை கட்டுகடங்காமல் தீப்பற்றியதாகவும் இந்த தீயை அணைப்பதற்கான செலவு கணக்குகள் குறித்து மன்றத்தின் பார்வைக்காக ஒப்புதல் தீர்மானமாக கொண்டுவரப்பட்டது. அதில் மொத்தம் செலவு 76 லட்சத்து 70 ஆயிரத்து 318 காட்டப்பட்டுள்ளது.
அதில் உணவு ,மற்றும் டீ ,காபி,மற்றும் குளிர்பானங்கள் மற்றும் பழங்களுகள் வாங்கியதற்க்கு மட்டும் 27 லட்சத்து 51 ஆயிரத்து 678 ரூபாய் கணக்கு காட்டப்பட்டுள்ளது விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.
இது தொடர்பாக மாநகராட்சி அதிமுக கவுன்சிலர்கள் கூறுகையில்,கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாகவும் , இதில் சமீபத்தில் நடந்த தீ விபத்து தொடர்பாக கணக்கு காட்டியுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.