தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் யூனியன் அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சிலர்களின் சாதாரண கூட்டம் – யூனியன் சேர்மன் ரமேஷ் தலைமையில் நடைபெற்றது.
ஒட்டப்பிடாரம் யூனியன் அலுவலக கூட்ட அரங்கில் ஒன்றிய கவுன்சிலர்களுக்கான சாதாரண கூட்டம் ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் தலைமையில் நடைபெற்றது. அப்போது ஒன்றிய கவுன்சிலர்களின் கோரிக்கைகள் குறித்தும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
மேலும் தமிழக முதலமைச்சரால் கடந்த ஜூன் 15 அன்று அனைத்து அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டதற்கு ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் சார்பாக நன்றிகள் தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் யூனியன் துணை சேர்மன் காசி விஸ்வநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வசந்தா, கிரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
ஓட்டப்பிடாரம் நிருபர்.