தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள K. குமாரபுரம் கிராமத்தை சேர்ந்த தங்கவேல் என்பவரின் மகன் முனியசாமி (50), மற்றும் அதே கிராமத்தை சேர்ந்த வீராச்சாமி மகன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் இருவரும் ஒரே இருசக்கர வாகனத்தில் K.குமாரபுரம் கிராமத்தில் இருந்து மீனாட்சிபுரம் கிராமத்திற்கு விவசாய வேலையாக சென்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தருவைக்குளம் மேலத்தெரு நடராஜன் என்பவரின் மகன் ஜெகன்(36) என்பவர் ஓட்டி வந்த சொகுசுகார், K. குமாரபுரம் to மீனாட்சிபுரம் இடையே கட்டுப்பாட்டை இழந்து ராதாகிருஷ்ணன் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் முனியசாமி, ராதாகிருஷ்ணன், ஜெகன் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். 3 பேரையும் விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் சிகிச்சைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் முனியசாமி பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் இந்த விபத்து குறித்து விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்,
-ந.பூங்கோதை.