தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் கேட்டை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்த காட்டு யானை காம்பவுண்ட் சுவரை இடித்து கொண்டு வெளியேறி சென்ற காட்சிகள் வெளியாகி உள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கோவை மாவட்டத்தில் தடாகம், மாங்கரை, தொண்டாமுத்தூர், மருதமலை உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகளவு உள்ளது. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொண்டாமுத்தூர் பகுதியில் சுற்றிவரும் ஒற்றை காட்டு யானையால் பல்வேறு சேதாரங்கள் ஏற்பட்டு வருகிறது. இரண்டு தினங்களுக்கு முன்பு தொண்டாமுத்தூர் அருகே கோவில் பூசாரி ஒருவரை காட்டு யானை ஒன்று தாக்கியதில் அவரது காயங்கள் ஏற்பட்டன. அதுமட்டுமின்றி அதே பகுதியில் யானையை விரட்ட முற்பட்ட இளைஞர் ஒருவர் யானை தாக்கி உயிரிழந்தார்.
இந்நிலையில் தொண்டாமுத்தூர் அருகே உள்ள மத்தி பாளையத்தில் ஊருக்குள் புகுந்த காட்டு யானை ஒன்று ஊருக்குள் உலா வந்தது. அப்பொழுது ஒரு வீட்டின் கேட்டை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்த காட்டு யானை வீட்டின் மறுபுறம் இருந்த காம்பவுண்ட் சுவரை உடைத்துக் கொண்டு வெளியே சென்றது இதனை அருகில் இருந்தவர்கள் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துள்ளனர் இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உறைந்து போயினர். காட்டு யானை ஊருக்குள் புகாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.