கஞ்சா நடமாட்டம் இருந்தால் உடனே எனக்கு போன் போடுங்க…” – கல்லூரி மாணவர்களிடம் தனது மொபைல் நம்பரை கொடுத்த விளாத்குளம் டி.எஸ்.பி.!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் உட்கோட்ட காவல்துறை சார்பில், விளாத்திகுளம் அருள்மிகு சுப்ரமணியசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “போதைப்பொருள் ஒழிப்போம்… மனித மாண்பை காப்போம்” -எனும் தலைப்பில் கல்லூரி மாணவர்களுக்கு டி.எஸ்.பி இராமகிருஷ்ணன் தலைமையில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விளாத்திகுளம் காவல் ஆய்வாளர் வெங்கடேஷ் பெருமாள், உதவி ஆய்வாளர்கள் முருகன், வீரபாண்டியன், கல்லூரியின் முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான மாணவ-மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில், கல்லூரி மாணவ- மாணவிகளிடம் சிறப்புரையாற்றிய விளாத்திகுளம் காவல் துணைக் கண்காணிப்பாளர் இராமகிருஷ்ணன்;
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
போதைப் பொருட்கள் பயன்படுத்துவதால் தனிமனிதனுக்கும், சமுதாயத்திற்கும் ஏற்படும் தீமைகள் பற்றி எடுத்துரைத்து போதைப்பழக்கத்திற்கு சென்று விடக்கூடாது என மாணவர்களிடம் அறிவுரை கூறினார். அதோடு மட்டுமன்றி, கல்லூரி மாணவர்களிடம், “கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் நடமாட்டம் இருப்பதை நீங்கள் அறிந்தால் உடனடியாக என்னுடைய மொபைலுக்கு கால் பண்ணுங்கள்… நான் அவர்களை பார்த்துக்கொள்கிறேன்” என்று தன்னுடைய மொபைல் எண்ணை கல்லூரி மாணவரிடம் கூறினார். மேலும் உங்களது குடும்பத்தில் உள்ளவர்கள், உறவினர்கள், நண்பர்கள் யாரேனும் போதைப் பழக்கத்திற்கு அடிமையாக இருந்தால் அவர்களை போதைப் பழக்கத்தில் இருந்து வெளியே கொண்டு வர முயற்சி செய்யுங்கள் என கேட்டுக்கொண்டார். பின்னர் இறுதியாக காவல்துறையினருடன் சேர்ந்து கல்லூரி மாணவர்கள் அனைவரும் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.