தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள பசுவந்தனை ஊராட்சிக்குட்பட்ட வடக்கு கைலாசபுரத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் 30 மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் மேலாண்மைக்குழு ஆலோசனைக்கூட்டம் மற்றும் புதிய உறுப்பினர்கள் தேர்வு கூட்டம் நடைபெற்றது.
அப்போது பள்ளியில் சுத்தமான குடிநீர் உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை என்று உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர். மேலும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சேதமடைந்து காணப்படும் பள்ளி கட்டிடங்கள், கழிப்பறைகள் சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் பெயரளவிற்கு கண்துடைப்பிற்காக பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக உறுப்பினர்கள் குற்றம்சாட்டியுனர்.
புதுப்பிக்கப்பட்டதாக கூறப்படும் கட்டிடங்களில் அடிக்கப்பட்ட பெயிண்ட் உதிர்ந்து வருவதாகவும், கழிப்பறையில் மீது வைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் சீட் சேதமடைந்து இருப்பது மட்டுமின்றி கதவு இல்லமால் இருப்பதாகவும், அதுமட்டுமின்றி பள்ளி அருகே இருக்கும் மின்சார டிராஸ்பாரத்தில் இருந்து அடிக்கடி மின்கசிவு ஏற்படுவதால் பள்ளி குழந்தைகள் அச்சத்துடன் செல்ல வேண்டிய சூழ்நிலை இருப்பதாக அடுக்கடுகாக குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர்.
பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் கல்வி ஆகியவற்றை கருத்தில் கொண்டு உறுப்பினர்களின் குற்றச்சாட்டுகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளி குழந்தைகளின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
-எஸ் நிகில்.