தூத்துக்குடி மாவட்டம் கவர்னகிரி வீரன் சுந்தரலிங்கனார் மணி மண்டபம் உள்ளிட்ட மணிமண்டபங்களில் காப்பாளர் இல்லாததால் பூட்டி கிடக்கும் அவலம் – மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
சுதந்திர போராட்ட தியாகி வீரன் சுந்தரலிங்கனாருக்கு ஓட்டப்பிடாரம் அருகே கவனகிரியில் மணிமண்டபம் அமைந்துள்ளது. இந்த மணிமண்டபத்தில் காப்பாளர் இல்லாததால் மணி மண்டபம் என் நேரமும் பூட்டி கிடக்கும் அவல நிலை உள்ளது. அதைப் போல் மணிமண்டபம் வளாகத்தில் உள்ள நூலகமும் நூலகர் பணியிடம் காலியாக உள்ளதால் நூலகமும் பூட்டி கிடைக்கிறது.
அதை போல் வல்லநாடு வெள்ளையத்தேவன் மணிமண்டபம், எட்டயபுரம் பாரதியார் மணிமண்டபம், கோவில்பட்டி கி ரா மணி மண்டபம், தூத்துக்குடி மண்டபம் குரூஸ் பர்னாந்து மணிமண்டபம், காமநாயக்கன்பட்டி வீரமாமுனிவர் மணிமண்டபம், கட்டாலங்குளம் வீரன் அழகுமுத்துக்கோன் மணிமண்டபம், உள்ளிட்ட மணி மண்டபங்களிலும் காப்பாளர் பணியிடம் நிரப்பப்படாததால் மணிமண்டபங்கள் பூட்டி கிடக்கும் அவல நிலை உள்ளது.
இதனால் மணிமண்டபங்களுக்கு வரும் சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகி வருகின்றனர் எனவே மாவட்ட ஆட்சியர் உடனடியாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஏழு மணி மண்டபங்களில் உள்ள காப்பாளர் பணியிடத்தை நிரப்பவும் நூலகம் அமைந்துள்ள பகுதிகளில் நூலகர் பணியிடத்தை நிரப்பவும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-எஸ் நிகில்
ஓட்டபிடாரம்.