தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே பாஞ்சாலங்குறிச்சியில் நடைபெற்ற மாட்டு வண்டி எல்கை பந்தயத்தில் சீரிப்பாய்ந்து சென்ற காளைகள்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே கவர்னகிரியைச் சேர்ந்த மோகன் ஓட்டப்பிடாரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆவார் மேலும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மோகன் தந்தை தந்தை குண்டன் பெருமாளின் 17 ஆவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு முன்னிட்டு இன்று சின்ன மாடு,பூஞ்சிட்டு மாடு என இரு பிரிவாக மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.
இதில் சின்ன மாட்டு வண்டி போட்டியில் 17-மாட்டு வண்டிகளும், பூஞ்சிட்டு மாட்டு வண்டி போட்டியில் 41-மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. போட்டிகளை அதிமுக முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக செயலாளருமான கடம்பூர் ராஜு துவக்கி வைத்தார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
6மைல் தூரம் நடைபெற்ற சின்ன மாட்டு வண்டி போட்டியில் முதல் பரிசை சங்கரபேரி ராஜா மாட்டு வண்டியும், 2-வது பரிசை மூலக்கரை முத்துஸ்ரீ மாட்டு வண்டியும், 3-வது பரிசை மேட்டூர் சுகன் கார்த்திக் மாட்டு வண்டியும், 4 பரிசு நாலந்துலா உதயம் துரைப்பாண்டி,மாட்டு வண்டியும் வெற்றி பெற்றது.
இதனை தொடர்ந்து நடைபெற்ற 5-மைல் தூரம் பூச்சிட்டு மாட்டு வண்டி போட்டியில் வடக்கு சிலுக்கன்பட்டி சபரிமுத்து மாட்டுவண்டி முதலிடத்தையும், 2-வது சிங்கிலிபட்டி ஆனந்த் 3-வது தருவைகுளம் தமிழ் செல்வன் வண்டியும் 4-வது மேல வேலாயுதபுரம் முனீஸ்வரி, மாட்டு வண்டியும் பிடித்தன.
மேலும் மாட்டு வண்டி எங்கே பந்தயத்தின் போது பூஞ்சிட்டு மாட்டு வண்டி பிரிவில் மாட்டு வண்டியின் சக்கரம் உடைந்தும் சிறிது தூரம் மாட்டு வண்டி ஓடியது பார்வையாளர்களை பரவசப்படுத்தியது.
பந்தயத்தை ஏராளமான பொதுமக்கள் சாலையின் இருபுறங்களில் நின்று கண்டு ரசித்தனர். பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் வெற்றி மட்டு வண்டி உரிமையாளர்களுக்கு, மாட்டு வண்டி ஓட்டிய சாரதிகளுக்கும் பரிசு தொகை வழங்கப்பட்டது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-எஸ் நிகில்
ஓட்டபிடாரம்.