கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு பகுதியில் பொது மருத்துவமனை இல்லாததால் எந்த ஒரு பெரிய விபத்துக்கள் நேரிட்டாலும் கோட்டயம் மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லும் நிலைமை உள்ளது. நேற்றைய தினம் பள்ளிவாசல் பகுதியில் உள்ள மூன்று வயது குழந்தை தீக்காயங்களுடன் மூணாறு டாடா பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது போதுமான மருத்துவ வசதிகள் இல்லாத காரணமாக கோட்டயம் மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லும் நிலைமை ஏற்பட்டது.
மருத்துவர் கௌதம்
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
வாகன ஓட்டுநர் ரவி
மூணாறு முதல் கோட்டயம் மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்வதற்காக மூணாறு டவுனில் மூணாறு மக்களுக்காக செயல் புரியும் மூணாறு டூரிஸ்ட் நைட் கெய்டு அசோசியேஷன் ஆம்புலன்சில் கொண்டு செல்லப்பட்டது. பொதுவாக மூணாறில் இருந்து கோட்டயம் மருத்துவ கல்லூரிக்கு 04.30 மணி நேரங்கள் பயணிக்க வேண்டி வரும். நமது மூணாறு நைட் கெய்டு அசோசியேசன் ஆம்புலன் 136 கி.மீ தூரம் 111நிமிடத்தில் கொண்டு சென்று குழந்தையின் உயிரை காப்பாற்றிய மூணாறு நைட் கெய்டு அசோசியேஷன் ஆம்புலன்ஸ் டிரைவர் ரவி அவர்களுக்கும், துணையாக இருந்த சரவணன் மற்றும் மருத்துவர் கௌதம் அவர்களுக்கும் மூணாறு மக்கள் தலைமையில் பாராட்டுகளும் நன்றிகளும் குவிந்த வண்ணம் உள்ளது.
தற்பொழுது மூணாறு மற்றும் பிற பகுதிகளில் கனமழை காரணமாக சாலைகள் சேதமடைந்த நிலையிலும் தன்னுடைய உயிர்களைப் பனையம் வைத்து , எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் குழந்தையின் உயிரை காப்பாற்றுவதற்காக அதிவேகத்தில் வாகனத்தை பயணித்து மற்றும் குழந்தை உயிரை காப்பாற்றிய மூணாறு டூரிஸ்ட் நைட் கெய்டு அசோசியேஷன் குழுவிற்கு மூணாறு மக்கள் தலைமையில் பெரும் வரவேற்பும் நன்றிகளும் குவிந்து கொண்டே இருக்கிறது.
நாளைய வரலாறு செய்திக்காக,
-மணிகண்டன் கா
மூணாறு,கேரளா