கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சுற்றுலாத்தலமான மூணார் பகுதி அருகே உள்ள சின்னக்கானல் பஞ்சயத்குட்பட்ட சூரியநல்லி அருகே உள்ள அறுபது ஏக்கர் பகுதியில் இரண்டு யானைகள் பலமாக சண்டையிட்டு படுகாயம் அடைந்தது
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
சக்கக்கொம்பன், முரிவாளன் கொம்பன் ஆகிய இரண்டு காட்டு யானைகள் சின்னக்கால் பகுதியில் பல நாட்களாக அடிக்கடி மோதிக்கொண்டன. சின்னக்கானல் அருபது ஏக்கர் சோலையில் சனிக்கிழமை காலை முரிவாளன் கொம்பன் படுகாயம் அடைந்து கீழே விழுந்தது. உடலில் 15 இடங்களில் கொம்பால் குத்திய காயங்கள் இருந்தன.
கடந்த 21ம் தேதி நடந்த மோதலில் இடது பின்னங்காலில் கொம்பன் காயம் அடைந்தது. அப்போது யானை நடக்க சிரமப்பட்டது. இதையடுத்து வனத்துறையினர் யானையை கண்காணிக்க தொடங்கினர். பின்னர் மீண்டும் யானைகள் மோதிக்கொண்டன. இதில் தான் பலத்த காயம் ஏற்பட்டது.
காயமடைந்த யானைக்கு வனத்துறையினர் தலைமையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், முதுகுத்தண்டுக்கு அருகில் ஏற்பட்ட ஆழமான காயமே மரணத்திற்குக் காரணம்.
முறிவாளன் கொம்பன் மரணமடைந்தது
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன் மூணாறு.