நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி,.தீவிர அரசியலில் ஈடுபட்டு, 2026 சட்டப்பேரவை தேர்தலை சந்திப்பதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். கட்சி கொடி அறிமுகம்,மாநில மாநாடு என அடுத்த கட்ட நகர்வுகள் நடந்து வரும் நிலையில்,தற்போது இதற்கெல்லாம் மகுடம் சூடும் விதமாக, பதிவு செய்யப்பட்ட விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துக்கு அரசியல் கட்சிக்கான அனுமதியை இந்திய தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.
இதனை கொண்டாடும் விதமாக தமிழக வெற்றிக் கழகத்தின் கோவை தெற்கு மாவட்டம் சார்பாக அனைத்து அணியினர் கலந்து கொண்ட உற்சாக கொண்டாட்டம் நடைபெற்றது. கோவை தெற்கு மாவட்ட தலைவர் விக்னேஷ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இளைஞரணி தலைவர் பாபு முன்னிலை வகித்தார். முன்னதாக கோவை குறிச்சி பொங்காளியம்மன் கோவில் முன்பாக திரண்ட கழக அனைத்து அணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தமிழகத்தி்ல் வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி வாகை சூடுவோம் என உற்சாகமாக கோஷமிட்டனர். தொடர்ந்து கோவிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகம் செய்து கோவிலுக்கு வந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
த.வெ.க. பொதுச்செயலர் புஸ்ஸி ஆனந்த் வாய்மொழி உத்தரவின் படி நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கோவை தெற்கு மாவட்ட செயலாளர் அருண்பாண்டியன், கோவை தெற்குமாவட்ட நிர்வாகிகள் அருண்ஈஸ்வர், உமாபதி, தமிழரசன், இளைஞரணி நிர்வாகிகள் D.சபரிஸ்,R.மாரிராஜ்,V.ஷாஜகான்,P.சரவணன்,A.வினோத்குமார், ஷெரீப்,A.தெளபீக் தொண்டரணி பவீன்,மகளிரணி கார்த்திகா,கல்லாபுரம் பழனிச்சாமி,சேகர்,சமீர்,அமான்,அனீஸ்,
பிரபுடேனியல்,பாபு, நாகராஜ், முருகேஷ்,ராம்குமார், மோகன், 95வது ஹபீபுர் ரஹ்மான், சம்னாஸ் ஜாஹீர், ரியாஸ் ,பிரகாஷ், குமரேஷ்,மகேஷ்,மகேந்திரன்,செல்வம்,விக்னேஷ் குமார்,சுரேஷ்,ரமேஷ்,ஜோதி,உட்பட பலர் கலந்து கொண்டனர்.
-சீனி, போத்தனூர்.