Trending

லிங் டிக்கெட் வசதி- போக்குவரத்து மேலாண் இயக்குனர் தகவல்!!!

கோவை அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் பயணிகளின் வசதிக்காக ‘லிங்க் டிக்கெட்’ எனும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து போக்குவரத்துக் கழக கோட்ட மேலாண் இயக்குனர் ஸ்ரீதரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த அறிக்கையில், கோவையில் காந்திபுரம், சிங்காநல்லூர், உக்கடம் ஆகிய மூன்று இடங்களில் இருந்து தொலைதூர வழித்தடங்களில் முன்பதிவு வசதியுடன் கூடிய பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த முன்பதிவு செய்யும் பயணிகளின் வசதிக்காக, ‘லிங்க் டிக்கெட்’ வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வசதியின் கீழ், பயணிகள் முன்பதிவு டிக்கெட் கட்டணத்துடன் கூடுதலாக ரூ. 30 செலுத்தி, பேருந்து நிலையங்களில் இருந்து நகர பேருந்துகளில் வேறு இடங்களுக்குச் செல்லலாம். அதேபோல, வேறு இடங்களில் இருந்து இந்த மூன்று பேருந்து நிலையங்களுக்கும் செல்ல முடியும். இந்த ‘லிங்க் டிக்கெட்’ வசதியை காந்திபுரம், சிங்காநல்லூர், உக்கடம் பேருந்து நிலையங்களில் இருந்து புறப்படும்போதோ அல்லது வந்திறங்கும்போதோ பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

கோவையில் நடைபெற்ற சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கான தென் மாநில அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் நான்கு மாநிலங்களை சேர்ந்த சி.பி.எஸ்.இ.பள்ளி மாணவ,மாணவிகள் மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்…

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp