தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தாரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர் மற்றும் கடம்பூர் செ.ராஜூ ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
செந்தில் பாலாஜி மீது பயத்தினால் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அவர் கையில் தான் திமுக உள்ளது என்று அதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேசினார்.
முன்னாள் அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ பேசுகையில் “பிறப்பால் பதவி கிடைப்பது திமுக, உழைப்பால் பதவி கிடைப்பது அதிமுக இது தான் அதிமுக – திமுக இடையே உள்ள வித்தியாசம். கருணாநிதி மகன் மு.க.ஸ்டாலின்,கருணாநிதி பேரன் , மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் என்ற பிறப்பால் பதவிக்கு வந்தனர்.
மருத்துவத் துறையில் அதிக சாதனைகள் நிகழ்த்தி அதிக விருதுகளை பெற்றுத்தந்த ஒரை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தான்ஃதற்போதைய மருத்துவதுறை அமைச்சர் ம.சு. – மாசு ஏற்படுத்தி விட்டார் .சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் மருத்துவ துறையை கெடுத்து, மக்களின் வாழ்வினை கெடுத்து கொண்டிருக்கிறார்
கொரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்ட காரணத்தினால் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரை பிரதமர் மோடியே பாராட்டியுள்ளார்.அதிமுக ஆட்சி காலத்தில் 11 மருந்துவ கல்லூரி கொண்டு வரப்பட்டது .தற்போதைய திமுக ஆட்சியில் ஒரு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கூட கொண்டு வரவில்லை. பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து திமுக ஆட்சிக்கு வந்து விட்டது,ஒரே கையெழுத்தில் நீட் தேர்வு ரத்து என்றார்கள் அதை நிறைவேற்றவில்லை.
ஒரு செங்கலை தூக்கி கொண்டு அலைந்த உதயநிதி ஸ்டாலினுக்கு – செங்கல் நிதி என்று மக்கள் அழைக்கின்றனர். திமுக கூட்டணியில் இருக்கும் 39 எம்.பிக்கள் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ஏன் குரல் கொடுக்கவில்லை, செந்தில் பாலாஜி மீது பயத்தினால் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறையில் செந்தில் பாலாஜி வாய் திறந்தால் தாங்கள் மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தினால் அமைச்சர் வழங்கி உள்ளனர். செந்தில் பாலாஜி கெட்டிக்காரர் தான், அமைச்சர் செந்தில் பாலாஜி கையில் தான் திமுக உள்ளது என்றார்.
இந்நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் காஞ்சி பன்னீர்செல்வம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மோகன் பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன் முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சத்யா நகரச் செயலாளர் விஜயபாண்டியன் மாநில வழக்கறிஞர் பிரிவுத்துறை துணை செயலாளர் ஈஸ்வரமூர்த்தி ஒன்றிய செயலாளர் அன்பரசு அழகர்சாமி பழனிச்சாமி நகர செயலாளர்கள் கப்பல் ராமசாமி முத்துராஜ் வாசமுத்து மாவட்ட அணி செயலாளர் ராமர் மாவட்ட இலக்கிய அணி செயலாளர் பாலகணேஷ் மாவட்ட எம் ஜி ஆர் மன்ற செயலாளர் பூமாரியப்பன் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஸ்ரீதர் மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணி செயலாளர் லட்சுமி பெருமாள் மாவட்ட கலை பிரிவு செயலாளர் ஓட்டு சாமி மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் நீலகண்டன் ஒன்றிய மாணவர் அணிச் செயலாளர் நவநீதகிருஷ்ணன் ஒன்றிய சிறுபான்மையினர் பிரிவு செயலாளர் ராஜ்குமார் ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் சாமிராஜ் மாவட்ட எம் ஜி ஆர் மன்ற இணைச் செயலாளர் காளி பாண்டியன் ஒன்றிய அவை தலைவர் முனியசாமி நகர்மன்ற உறுப்பினர் வள்ளியம்மாள் மாரியப்பன் ஒன்றிய குழு உறுப்பினர்கள் அச்சங்குளம் முருகன் முத்துப்பாண்டியன் சமூக கனி இந்திரன் மாவட்ட மகளிரணி இணைச் செயலாளர்கள் கோமதி ஜெயந்தி சரவணசாமி பிரபாவதி பஞ்சாயத்து துணைத்தலைவர் ரேவதி ஒன்றிய மகளிரணி செயலாளர் செல்லத்தாய் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர் மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் கோவில்பட்டி நகர மன்ற உறுப்பினர் எம் ஜி ஆர் கவியரசன் நன்றியுரை ஆழ்த்தினார் இந்நிகழ்வின் ஏற்பாட்டினை ஒன்றிய செயலாளர் செல்வகுமார் கருப்பசாமி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர் இக்கூட்டம் நடைபெற்றது
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.