பாளை மார்க்கெட்டில் இருந்து புளியம்பட்டி – மணியாச்சி வழியாக கல்லத்திக்கிணறு இயக்கப்படும்தடம் எண் 12 G பேருந்து மழைக்காலங்களில் மழைநீர் பேருந்துக்கு வருவதால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவதாகவுதம் அந்த பேருந்தானது அடிக்கடி பழுதடைந்து இடையில் நிற்பதாகவும் அப்பகுதி பொதுமக்கள் சட்டமன்ற உறுப்பினர் கோரிக்கை விடுத்த நிலையில் இன்று தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முககையா பேருந்தில் ஏறி திடிர் ஆய்வு மேற்கொண்டார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மேலும் நடத்துநர் மற்றும் ஓட்டுநரிடம் பொதுமக்களின் புகார் குறித்து கேட்டறிந்தார்.மேலும் உடனடியான பணிமனை மேலாளரை தொடர்பு கொண்டு நல்ல நிலையில் உள்ள பேருந்துக்கு மாற்றாக நல்ல நிலையில் உள்ள பேருந்தை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது அக்காநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் அய்யாத்துரை ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் கணேசன் இளைஞரணி மகேஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.