கோவையில் பெருமைகளை கொண்டாடும் விதமாக ஒவ்வொரு ஆண்டு ‘கோயம்புத்தூர் விழா’ கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒரு வாரம் வரை நடக்கும் இந்த விழாவில் பொதுமக்களை மகிழ்விக்கும் வகையில் பல்வேறு வகையான நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் கோயம்புத்தூர் விழாவின் 17 வது பதிப்பு நவம்பர் 23 முதல் டிசம்பர் 1 வரை நடைபெற உள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கோயம்புத்தூர் விழாவின் ஒரு பகுதியாக டபுள் டக்கர் பஸ் இயக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் பொதுமக்களை மகிழ்விக்கும் விதமாக டபுள் டக்கர் பேருந்தை கோயம்புத்தூர் விழாவில் மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளனர். வ.உ.சி பூங்காவில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராதிகுமார் பாடி, காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் பேருந்து பயணத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். இந்த கடந்த ஆண்டு டபுள் டெக்கர் பேருந்து பயணங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.
நவம்பர் 24 ம் தேதி முதல் டிசம்பர் 1ம் தேதி வரை இலவசமாக பயணம் செய்யலாம். இதற்கென்ன உருவாக்கப்பட்ட பிரத்தேக மொபைல் செயலி மூலம் பயணத்தை முன்பதிவு செய்து பயணத்தை மேற்கொள்ளலாம். டபுள் டக்கர் பேருந்து பயணங்களை www.coimbatorevizha.theticket9.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். டபுள் டக்கர் பஸ் வ.உ.சி பூங்காவில் இருந்து முக்கிய சாலை வழியாக சென்று மீண்டும் அதே இடத்திற்கு வந்து சேரும்.
சவாரிகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை இருக்கும். ஒரு நாளைக்கு 18 – 20 சவாரிகள் செய்யப்படும். கோவை மக்கள் மத்தியில் டபுள் டக்கர் பேருந்துக்கு அதிக வரவேற்பு உள்ள நிலையில், இந்த ஆண்டும் அதிகமானோர் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. டபுள் டக்கர் பஸ் 1920 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் முதல் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.