கோவை மாவட்டம் வால்பாறை சி ஐ டி யு ஆட்டோ சங்கம் தமிழக முதல்வருக்கு கடிதம்
கடந்த 20 ஆண்டுக்கு முன்பு இருந்த மக்கள் தொகை இப்பொழுது இல்லை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு உழைப்புக்கேற்ற ஊதியம் கிடையாது மாற்று தொழில் கிடையாது எஸ்டேட் பகுதிகளில் சாலை வசதி மற்றும் அடிப்படை வசதிகள் எதுவும் கிடையாது.
இதனால் இங்கிருக்கும் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தனது எதிர்காலத்தை பாதுகாக்க சமவெளி பகுதியான கோவை, திருப்பூர்,ஈரோடு, இன்னும் பல பகுதிக்கு சென்று விட்டனர். இதனால் இங்கு மக்கள் தொகை மிகவும் குறைவு தற்பொழுது புதிதாக ஆட்டோ இயக்குவதற்கு அனுமதி வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சித் தலைவர் இடமும் வட்டார போக்குவரத்து அலுவலகம் அனுமதி வழங்குவதாகவும் இங்கிருக்கும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் அனுமதி கேட்டு விண்ணப்பித்தனர் இதை ஏற்று புதிதாக ஆட்டோ இயக்குவதற்கு அனுமதி கொடுத்தால் நாங்கள் மிகவும் சிரமப்படுவோம் ஏற்கனவே பெட்ரோல், டீசல், விலை உயர்வு மற்றும் சாலை இதர வரிகளினால் நாங்கள் மிகவும் சிரமப்படுகிறோம். இது தொடர்பாக இப்பகுதியில் இருக்கும் அதிகாரியிடம் நாங்கள் சொல்வது உண்மையா என்பதை கண்டறிந்து ஆலோசித்து தக்க நடவடிக்கை எடுங்கள் எங்களைப் போன்று புதிதாக வாங்குபவர்களும் சிரமப்படக்கூடாது என்பதற்காகவும் தாங்கள் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறோம் என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நாமும் களத்தில் இறங்கி ஆய்வு செய்து வால்பாறையில் சுமார் 6 இடங்களில் ஆட்டோக்கள் ரோட்டோரங்களில் பாதுகாப்பில்லாமல் நிறுத்தப்படுகிறது வால்பாறை சுற்றுலா பயணிகளும் அதிகம் வருகிறார்கள் இங்கு நிரந்தரமாக கார் பார்க்கிங் வசதியும் கிடையாது தமிழகத்தில் அதிக வருமான வரக்கூடிய நகராட்சி வால்பாறை ஆகும் ஆனால் இது போன்ற அடிப்படைத் தேவைகளை செய்ய மாட்டார்கள் எஸ்டேட் பகுதிகளும் மாண்புமிகு தமிழக முதல்வர் அறிவித்த கூலி இன்னும் கிடைக்கவில்லை இது போன்ற பலவேறு காரணங்களால் கடந்த 20 ஆண்டுக்கு முன்பிருந்த மக்கள் தொகை தற்போது இல்லை இவர்கள் கோரிக்கை நியாயமானது தமிழக முதல்வர் அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் ஆலோசனை செய்து வால்பாறையில் கடந்த 20 ஆண்டுக்கு முன்பு இருந்த மக்கள் தொகையை மீண்டும் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுத்து எடுத்தால் இப்பகுதியில் இருக்கும் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பொதுமக்கள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் அப்பொழுது புதிய ஆட்டோ களுக்கு பர்மிட் வழங்கினால் அனைத்து ஆட்டோ ஓட்டுநர்களும் வாழ்வாதாரத்தை பாதுகாக்க முடியும் இல்லையென்றால் தற்பொழுது இருப்பது போல் புதிதாக வாங்குபவர்களும் சிரமப்படுபவர்கள் என்பது நிதர்சனமான உண்மை.
செய்தியாளர்
-P. பரமசிவம், வால்பாறை.