தூத்துக்குடி டிச _17 தூத்துக்குடிமாநகரப் பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை 50க்கும் மேற்பட்ட உயர்தர மின்மோட்டார்கள் மூலம் அகற்றும் பணி யை இரவு நேரத்தில் அமைச்சர் கீதாஜீவன் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 11, 12 ஆகிய இரு தினங்கள் பெய்த கனமழை காரணமாக தூத்துக்குடி மாநகரத்தில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. மழை விட்டு இரண்டு தினங்கள் ஆகியும் மழை தண்ணீர் வடியாததால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.
இந்தநிலையில் மழை நீரை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி தூத்துக்குடி கதிர்வேல் நகர், ராஜீவ் நகர், தபால் தந்தி காலனி, கோக்கூர் ஆகிய பகுதிகளில்டீசல் மோட்டார் மூலம் தேங்கியுள்ள மழை நீரை ராட்சச மின் மோட்டார் மூலம் வெளியேற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இரவு நேரத்தில் நடைபெற்று வரும் இந்த பணியை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற 50க்கும் மேற்பட்ட உயர்தர மின்மோட்டார்கள் மூலம் மழை நீரை வெளியேற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மேலும், திருச்சி மதுரை விருதுநகர் கோவில்பட்டி உள்ளிட்ட நகராட்சியில் இருந்து பொறியாளர்கள் வரவழைக்கப்பட்டு மழை நீரை அகற்றும் பணியை கண்காணித்து வருகின்றனர்என கூறினார்.
நாளைய வரலாறு செய்தலுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.