கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் சுற்றுலாத்தலமான மூணார் மற்றும் மூணாறு சுற்றியுள்ள பகுதிகளிலும் வசிக்கும் மக்கள் அதிகமானோர் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் ஆவர்.
இவர்கள் சுமார் நூறு ஆண்டு காலமாக காடுகளை செம்மைப்படுத்தி தேயிலை தோட்டங்களை வளர்த்து தற்போது தேயிலை ஏற்றுமதியில் இந்திய தேசம் மிக முக்கிய பங்கு அடைந்ததற்கு காரணம் என்று சொல்லலாம். ஆனால் வசித்து தேயிலை தோட்டங்களில் வேலை செய்து வரும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் இன்னும் மேம்படவே இல்லை இதனை அரசும் நிறுவன முதலாளிகளும் கண்டு கொள்வதில்லை தொழிலாளர்களின் வருமானம் தற்பொழுது இருக்கும் தலா வருமானங்களை விட மிகவும் குறைவானதாக இருக்கிறது. தற்கால சூழ்நிலையில் உள்ள விலை ஏற்ற இறக்கண்களுக்கு ஏற்றவாறு சம்பளம் உயர்வு மாற்றம் அடையவே இல்லை 50 வருடங்களுக்கு முன்பு தொடர்ந்த அதே நடைமுறையை தான் பின்பற்றி வருகின்றனர் நேற்று மூணாறில் நடந்த பிரச்சாரத்தில் தோட்ட தொழிலாளிகளின் சம்பளம் 700 ரூபாயாக உயர்த்த போராட்டம் தொடரும் என்று AITUC தலைவர் KP.ராஜேந்திரன் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அரசு கூட்டணி கட்சியாக இருந்தாலும் நாங்கள் எதிர்த்து போராட்டத்தை மேற்கொள்ளவோம் சரியான தீர்வு கிடைக்கா விட்டால் போராட்டம் வலுப்பெறும் எனக் குறிப்பிட்டார். மேலும் கேரளாவில் உள்ள தேயிலை, ஏலக்காய், காபி, ரப்பர் ஆகிய தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அரசு இலவசமாக வீடு கட்டி தரவேண்டும், தொழிலாளர்களுக்கு நிறுத்தப்பட்ட சலுகைகளை மத்திய அரசு திரும்ப வழங்க வேண்டும். 100 நாட்கள் வேலை திட்டத்தில் தொழிலாளர்க ளின் எண்ணிக்கையை குறைக்க கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏ.ஐ.டி.யூ.சி. சங்கம் சார்பில் முன்னாள் மந்திரி கே.பி.ராஜேந்திரன் தலைமையில் கடந்த 10-ந்தேதி பிரசார பாதயாத்திரை தொடங்கப்பட்டது. இந்த யாத்திரை ஊர்வலம் மூணாறுக்கு நேற்று வந்தது. அங்கு பிரசார பாதயாத்திரைக்கு வரவேற்பு நிகழ்ச்சி மற்றும் பொதுக் கூட்டம் நடந்தது. இதில் பீர்மேடு எம்.எல்.ஏ.வாலூர் சோமன், மூணாறு ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்க தலைவர் அபுஷேப், இடுக்கி மாவட்ட செயலாளர் குருநாதன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி இடுக்கி மாவட்ட இணை செயலாளர் பழனிவேல், கேரள மாநில வழங்கல் துறை நல வாரிய தலைவர் பி.முத் துப்பாண்டி, மூணாறு மண்டல இந்திய கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் சந்திரபால், மற்றும் ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். பிரசார பாதயாத்திரைக்கு வண் டிப்பெரியார், நெடுங்கண்டம் ஆகிய இடங்களிலும் ஏ.ஐ.டி. யூசி. சங்கத்தினர் வரவேற்பு அளித்தனர்.
நாளை வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன் மூணாறு.