மலரும் நினைவுகள் – தினசரி காலண்டர் -2025 :
அமெரிக்கா, மலேசியா, துபாய், குவைத் என உலகம் முழுவதும் வெளிநாடுகள், மாநிலங்கள், மாவட்டங்களில் பரவியும் பிரிந்தும் கிடக்கும் மதுக்கரை அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவ-மாணவிகளை ஒருங்கிணைக்க பெரும் முயற்சி எடுக்கப்பட்டது.
பிரம்மாண்ட சாதனை: கடந்த 25-4-2023 துவங்கி ஒன்றரை வருடமாக முயற்சித்து வாட்சம் குழுவில் மதுக்கரை அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவ-மாணவிகளை உறுப்பினர்களாக ஆயிரம் பேர்களை உலகம் முழுவதும் தேடி கண்டு பிடித்து இணைக்கப்பட்டது. இவர்கள் தொழிலதிபர்கள், நீதிபதிகள், சட்ட வல்லுனர்கள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், விஞ்ஞானிகள், பொறியாளர்கள் மற்றும் எல்லாவற்றுக்கும் மேலாக. மனிதநேயம் மிக்கவர்களாக சிறந்து விளங்கி வருகின்றனர்.
மதுக்கரை அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியர்
ஷகிலா ஆசிரியர் பாமா ஆகியோரிடம் தினசரி காலண்டர் வழங்கிய குழுவினர்.
இதுவரை ஆயிரம் பேர் இணைக்கப்பட்ட ஒரே பிரம்மாண்ட முன்னாள் மாணவ-மாணவிகள் இணைந்த,,பேட்ஜ் பாகுபாடு இல்லாத-சாதி,,மதம், ஆன்மீகம், அரசியல், சினிமா, ஏழை பணக்காரன், பள்ளி சார்பற்ற- பிரம்மாண்டக்குழு இது என சாதனை படைக்கப்பட்டுள்ளது. சாதனை மாணவி ஐஸ்வர்யாவுக்கு நேரில் பாராட்டு: 2024 ம் ஆண்டு மார்ச் பொதுத்தேர்வில் மதுக்கரை அரசு பள்ளி சாதனை மாணவி பத்தாம் வகுப்பில் 488 மதிப்பெண் எடுத்த ஐஸ்வர்யாவுக்கு பாராட்டும் சீருடையும் நோட்டுகளும் 7,000 ரூபாய் ஊக்கத்தொகையும் வழங்க தீர்மானிக்கப்பட்டது.
மதுக்கரை அரசு மேல்நிலைப்பள்ளி மூத்த, முன்னாள் மாணவர் அமிர்தலிங்கம் தலைமையில் அவரது புதல்வி அருள்மொழி கரங்களால் இந்த ஊக்கப்பரிசுகள் கடந்த 18-5-2024 அன்று காலை 8.45 மணி அளவில் மதுக்கரையில் வீடு தேடிச்சென்று வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் முன்னாள் மாணவர்கள் சீரபாளையம் கணேசன் ஆயிரம் ரூபாய், ராதா ஸ்டுடியோ
போட்டோகிராபர் ஜான் 500 ருபாய், பத்திரிக்கையாளர் ஆர்.கே.விக்கிரம பூபதி 500 ரூபாய் மற்றும் ஓய்வு கல்வி அதிகாரி-ஆசிரியர் முனைவர் தனலட்சுமி அவர்கள் ஆலோசனையில்,
கோவை சுகுணாபுரம் மேற்கு பகுதியை சேர்ந்த மாரப்பன் அவர்கள் நினைவாக சமூக சேவகர் அசோக்குமார் 5 ஆயிரம் ரூபாய் என நல்ல உள்ளங்கள் பங்களிப்பு மூலம் ஊக்கப்பரிசு
வழங்கப்பட்டது.
மதுக்கரை ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமையாசிரியர் ஜெயந்திக்கு ராதா ஸ்டுடியோ உரிமையாளர் ஜான், என்.ஆனந்த், ஆர்.கே.விக்கிரம பூபதி ஆகியோர் காலண்டர் வழங்கியபோது….
இந்நிகழ்ச்சியில் குழுவினர் கணேசன், ஆர்.கே.விக்கிரம பூபதி,,ஜான் உள்பட. குழுவினர் பங்கேற்றனர். முதல் முயற்சியில் வெற்றி: மலரும் நினைவுகள் குழுவை பிரபலப்படுத்த முதல் ஆண்டாக மலரும் நினைவுகள் -2025 தினசரி காலண்டர் தயாரித்து அச்சடிக்கப்பட்டது. அன்பளிப்பு தந்த முன்னாள் மாணவர்களுக்கு நன்றி: காலண்டர் சிறப்பாக வெளீவர ஸ்பான்சர்களை முன்னாள் மாணவர்கள் சாலம் பாஷா, கோவை காந்திபுரம் “கோவை கார்ட்ஸ்” உரிமையாளர் .S.ஹிதாயத்துள்ளா, L.சார்லஸ் (எ) ஜோசப் அகஸ்டின், முன்னாள் மாணவி பிச்சனூர் A.சாந்தி செய்து இருந்தனர்.
முன்னாள் மாணவர் சத்தியராஜ் தினசரி காலண்டர் பெற்றபோது….
காலண்டர் வடிவமைப்பு மதுக்கரை குவாரி ஆபீஸ் “ராதா ஸ்டுடியோ” உரிமையாளர் ஜான், ஒருங்கிணைப்பு J அன்னம்மா ஜெஸி பணிகளை முன்னின்று செய்த இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள் தெரிவிக்கப்பட்டது. மதுக்கரை அரசு பள்ளியில் படித்த முன்னாள் மாணவ-மாணவிகள் குழுவில் உள்ள விருப்பம் உள்ளவர்கள் ஒரு காலண்டர் 10 ரூபாய் தந்து பெற்றுக்கொள்ளலாம் எனவும் ஒருவருக்கு 2 காலண்டர் மட்டுமே வழங்கப்படும் எனவும் முன்பதிவு இல்லை. முந்துபலர்களுக்கே முன்னுரிமை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மலரும் நினைவுகள் வாட்சப் குழுவில் மதுக்கரை அரசு மேல்நிலைப்பள்ளி யில் படித்த ஒட்டுமொத்த முன்னாள் மாணவ மாணவிகள் பேட்ஜ் பாகுபாடின்றி இணைய தலைமை ஒருங்கிணைப்பாளர் ஆர்.கே.விக்கிரம பூபதி Watsup – 99443 28589 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. முதல் காலண்டர் விநியோகம்: மலரும் நினைவுகள் -2025 தினசரி முதல் காலண்டர் மதுக்கரை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஷகிலா, ஆசிரியர் பாமா ஆகியோரிடம் ஒருங்கிணைப்பு குழுவினர் ஆர்.கே.விக்கிரம பூபதி, போட்டோகிராபர் ஜான், ஆனந்த் உள்பட குழுவினர் பள்ளிக்கு நேரில் சென்று 23-12-2024 அன்று வழங்கினர்.
மதுக்கரையில், சுந்தராபுரம் சாலையில் குரும்பபாளையம் பிரிவில் இயங்கும் ஆர்.ஜி டைலர்ஸ் உரிமையாளரும் முன்னாள் மாணவருமான சத்தியராஜ் கடையில்….
அப்போது, குழு மூலம் உறுப்பினர்கள் ரத்ததானம், பிறந்த தேதி, போன் நம்பர் அடங்கிய அடையாள அட்டைகள் இதுவரை 70 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது எனவும் 2026 ம் ஆண்டில் தினசரி, மாதக் காலண்டர்-, டைரி அச்சடிக்கவும் ரத்ததான முகாம், இலவச மருத்துவ முகாம், பிரம்மாண்ட சந்திப்பு விழா, ஆசிரியர்கள் கவுரவிப்பு விழா நடத்தவும் திட்டமிடப்பட்டு உள்ளொம் எனவும் மலரும் நினைவுகள் ஒருங்கிணைப்புக்குழுவினர் தெரிவித்தனர். இதேபோல, மதுக்கரை ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமையாசிரியர் ஜெயந்தி மற்றும் ஆசிரியர்களுக்கு குழு சார்பில் நேரில் காலண்டர் வழங்கி கிறிஷ்துமஸ், புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
சீரபாளையம் ராசு முனியப்பன் அவர்கள்.
குழு பட்டியல் விவரம்: மலரும் நினைவுகள் – ஒருங்கிணைப்பு குழுவில் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஆர்.கே.விக்கிரம பூபதி, எம்.அமிர்தலிங்கம், எஸ்வி.கணேசன், எஸ்.ஹேமலதா, வெ.ரமேஷ், எம்.ஜான், எஸ்.கோபி சுப்பிரமணியம், கவுரவ ஆலோசகர் C.ஜெகநாதன் L.L.M, ஒருங்கிணைப்பாளர் ஜெ.அன்னம்மா ஜெஸி, என்.ஆனந்த் இடம்பெற்றுள்ளனர்.
காலண்டர் அச்சிட்டு வந்ததும் மதுக்கரையில் சுந்தராபுரம் சாலையில் குரும்பபாளையம் பிரிவில் இயங்கும் ஆர்.ஜி டைலர்ஸ் உரிமையாளரும் பள்ளி முன்னாள் மாணவரருமான சத்தியராஜ் , முதல் நபராக வாங்கி கடையில் மாட்டியிருந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
மலரும் நினைவுகள் காலண்டர் பெற்ற மகிழ்ச்சியில் வெ.ரமேஷ்.
சீரபாளையம் கிராமத்தில் வணிக கடைகளில் காலண்டரை மாட்டுவதாக கூறி முன்னாள் மாணவர் ராசு முனியப்பன் 5 காலண்டர்களை வாங்கிச்சென்றது உழைப்புக்கு கிடைத்த பலன் என பெரும் மகிழ்ச்சியை தந்தது.https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
-ஆர்.கே.விக்கிரம பூபதி
2 Responses
🌻 உன்னதமான பல நோக்கங்களுடன் தொடக்கப்பட்டுள்ள இந்த பழைய மாணவர்கள் ஒருங்கிணைப்பு குழுவின் தினசரி நாட்காட்டி தயாரித்து சொற்ப விலையில் வழங்கும் இந்த முயற்சி, அந்த குழுவின் செயல்பாட்டில் ஒரு மைல்கல்.
பல்வேறு சமுதாய விழிப்புணர்வு மற்றும் சமுதாய மறு கட்டமைப்பு செயல்களில் இந்த குழுவானது தொடர்ந்து செயல்பட்டு அவர்களது அனைத்து செயல்களிலும் வெற்றி பெற மனமார வாழ்த்துகிறோம் – இணைந்து பயணிக்கிறோம். 💐
Wow …
Weldon
Superp
Tq நாளைய வரலாறு இதழுக்கு..