கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை ஐயர் பாடி ரேப்பை மட்டம் பகுதியில் சின்ன ஹாஸ்பிடல் அருகாமையில் உள்ள ஆபத்தான வளைவு பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. அங்கு மரங்களை வெட்டி விட்டு சாலையின் அருகாமையில் உள்ள தடுப்புச் சுவர்களையும் சேதப்படுத்திவிட்டு சென்று விட்டார்கள்.
அப்பகுதியில் தடுப்புச் சுவர் கண்டிப்பாக வைக்க வேண்டும். விபத்துக்கள் ஏற்படும் முன்னே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தடுப்புச் சுவரை அமைத்துத் தர வேண்டும் என அவ்வழியே செல்லும் வாகன ஓட்டுனர்கள் கூறி வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
வால்பாறை இருந்து செய்தியாளர்
-திவ்யக்குமார்.