கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் சுற்றுலா தலங்களில் மிக முக்கியமான ஒரு சுற்றுலா தளம் மூணாறு. மூணார் பகுதிகளில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அங்கே வசித்து வரும் மக்களின் எண்ணிக்கையும் சற்று அதிகரித்துக் கொண்டே வருகிறது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
சுற்றுலாத்தலமான மூணாறு பகுதியில் அரசு போக்குவரத்து வாகனங்கள் நிறுத்தவும் சுற்றுலா பயணிகள் வரும் வாகனங்களை நிறுத்தவும் தனியாராக செயல்படும் ஆட்டோ மற்றும் ஜீப் போன்ற வாகனங்களை நிறுத்தவும் இடையூறாக இருக்கின்றன.
இரண்டு மூன்று இடங்களில் பேருந்துகளை நிறுத்துவதில் ஒன்று இரண்டு பேருந்துகள் மட்டுமே நிறுத்த முடிகிறது அது மட்டுமல்லாமல் அதன் அருகில் வாடகை ஜீப்புகளும் ஆட்டோக்களும் நிறுத்துவதாலும் சில நேரங்களில் பேருந்து ஓட்டுனர்களுக்கும் ஜீப் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இடையே வாக்குவாதமும் ஏற்படுகின்றன.
வாகனங்களை நிறுத்த நெருக்கடி ஏற்பட்டு வருகிற மிக முக்கிய காரணத்தினால் அங்கு அனைவரும் சுமூகமாக வந்து செல்ல ஒரு நவீன பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என பல மக்கள் தரப்பிலிருந்து கோரிக்கை எழுந்தாலும் அரசு அதைப்பற்றி கண்டு கொள்ளவே இல்லை. எனவே உடனடியாக அரசு இதனை கருத்தில் எடுத்துக் கொண்டு நவீன பேருந்து நிலையத்தை அமைத்து கொடுத்தால் சுற்றுலாத்துறை மேம்படும் பொருளாதார வளர்ச்சி அடையும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ஜான்சன் மூணாறு.