தூத்துக்குடி|:தானம் அறக்கட்டளையின் தூத்துக்குடி மண்டலம் சார்பில் வளர்ச்சிக்காக ஒன்றிணைவோம் என்ற தலைப்பில் மாபெரும் வாக்கத்தான் நடை பேரணி விளாத்திகுளத்தில் நடைபெற்றது.
இந்தப் பேரணியை விளாத்திகுளம் காவல் ஆய்வாளர் சக்திவேல் துவங்கி வைத்தார். இந்த பேரணி விளாத்திகுளத்தில் அமைந்துள்ள நல்லப்ப சாமிகள் மணிமண்டபத்தில் இருந்து தொடங்கி நடை பயணமாக வந்து ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் உள்ள விளாத்திகுளம் வட்டார வயலக கூட்டமைப்பு அலுவலகத்தில் நிறைவு பெற்றது. அதன் பின்பு வளர்ச்சிக்காக ஒன்றிணைவோம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.
இதில் கலந்துகொண்ட முருகப்பன் வேளாண்மை துறை இயக்குனர் தூத்துக்குடி குமரன் வேளாண்மை துறை உதவி இயக்குனர் விளாத்திகுளம் சங்கரவேல் தோட்டக்கலை உதவி இயக்குனர் தென்காசி ஜணார்சன் அரசு சித்த மருத்துவர் விளாத்திகுளம் கருப்பசாமி கால்நடை மருத்துவர் ஆற்றங்கரை மாரிச்செல்வி மேலாளர் கனரா வங்கி விளாத்திகுளம் இந்திராணி தலைமை ஆசிரியர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி விளாத்திகுளம் ரவி நாராயணன் விளாத்திகுளம் வயலகம் வெள்ளைச்சாமி புதூர் வட்டார வயலகம் ஜெசிந்தாமேரி விளாத்திகுளம் வட்டார களஞ்சியம் மலர் தூத்துக்குடி வட்டார களஞ்சியம் பால குரு தங்கம்மாள் கயத்தார் வட்டார களஞ்சியம் தமிழ்செல்வி ஓட்டப்பிடாரம் வட்டாரம் களஞ்சியம் மற்றும் மண்டல பரஸ்பர ஒருங்கிணைப்பாளர்கள் வயலகம் களஞ்சியம் புதூர்
கயத்தாறு வயலகம் ஓட்டப்பிடாரம் தூத்துக்குடி ஆகிய வட்டாரங்களில் ஒருங்கிணைப்பாளர்களும் களப்பணியாளர்களும் இந்த பேரணியில் கலந்து கொண்டனர். ராஜகுரு பொறுப்பாளர் விளாத்திகுளம் வட்டாரம் வயலகம் கலந்து கொண்டு நன்றியுரை ஆற்றினார்கள்
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.