தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் வீரபாண்டிய கட்டபொம்மன் அறக்கட்டளை சார்பில் வீரபாண்டிய கட்டபொம்மன் 266வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாநில காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர், வீரபாண்டிய கட்டபொம்மன் அறக்கட்டளை தலைவர் நாகராஜன் தலைமையில் நடைபெற்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மாவட்ட காங்கிரஸ் ஓ பி சி பிரிவு தலைவர் திருஞானம், ஒன்றிய பெருந்தலைவர், திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் பொன்முத்தையா பாண்டியன், நெல்கட்டும்செவல் ஊராட்சி மன்ற தலைவர் பாண்டியராஜா, மாநில காங்கிரஸ் பொது குழு உறுப்பினர் வழக்கறிஞர் சங்கை கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர், திமுக வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா, மாநில மருத்துவர் அணி துணை அமைப்பாளர் மருத்துவர் செண்பக வினாயகம் ஆகியோர் கலந்து கொண்டு மாலைகள் அணிவித்து மலர் தூவி புகழஞ்சலி செலுத்தினார்கள். நிகழ்ச்சியில் மாவட்ட காங்கிரஸ் விவசாய அணி தலைவர் மனிகண்டன், திமுகமாவட்ட அவைத்தலைவர் பத்மநாதன், மாவட்ட திமுக துணை செயலாளர் மனோகரன், திமுக நகர செயலாளர் ரூபி பாலசுப்ரமணியன், மதிமுக நகர செயலாளர் கணேசன், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் கட்டபொம்மன், முன்னாள் பேருராட்சி துணை தலைவர் செல்வம், மாவட்ட திட்ட குழு உறுப்பினர் சரவணன், பேரூராட்சி கவுன்சிலர் மாரிமுத்து, முன்னாள் கவுன்சிலர் கோட்டியப்பன், வட்டார காங்கிரஸ் விவசாய அணி தலைவர் முருகேசன் , தமாகா தலைவர் ஜீவானந்தம், தேமுதிக நகர செயலாளர் நாகராஜன், மாவட்ட விவசாய தொழிலாளர்கள் அணி துணை அமைப்பாளர் முனீஸ்வரன், தகவல் சுந்தர் தகவல் தொழில் நுட்ப அணி கண்ணன், முத்துகுமார், சக்திவேல், ராஜேந்திரன், ராஜகம்பள நாயக்கர் சமுதாய நாட்டாமை நவநீதகிருஷ்ணன், கட்டபொம்மன் இளைஞர் அணி தலைவர் தங்கமுனியான்டி, முருகன், பரமசிவன், உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கட்டபொம்மன் அறக்கட்டளை செயலாளர் ராஜசேகரன் நன்றி கூறினார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தென்காசி மாவட்ட செய்தியாளர்
-திருமலை குமார்.